ஆர்வம் இருந்தால் எந்தத் துறையினரும் அரசியலுக்கு வரலாம்: பொன். ராதாகிருஷ்ணன்

அரசியலில் ஆர்வமுள்ள எந்தத் துறையினரும் அரசியலுக்கு வரலாம் என்றார் மத்திய கப்பல், தரைவழிப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்.
ஆர்வம் இருந்தால் எந்தத் துறையினரும் அரசியலுக்கு வரலாம்: பொன். ராதாகிருஷ்ணன்

அரசியலில் ஆர்வமுள்ள எந்தத் துறையினரும் அரசியலுக்கு வரலாம் என்றார் மத்திய கப்பல், தரைவழிப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்.
புதுக்கோட்டையில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியது:
குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக அறிவித்துள்ள வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து வரும் அனைத்துக் கட்சிகளுக்கும் நன்றிதெரிவித்துக் கொள்கிறேன்.குறிப்பாக அதிமுகவின் இரண்டு அணிகளுக்கும் நன்றி. இதுபோன்ற சூழ்நிலைகளால் குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது. தேர்தலில் போட்டி இருந்தாலும் எங்கள் வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதி. 
திமுக } காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் தான் இந்தியாவும் தமிழகமும் அழிவை நோக்கிச்சென்றன. அரசியல் ஆர்வம் கொண்ட எந்த துறையினரும் அரசியலுக்கு வரலாம். ரஜினி அரசியலுக்கு வருவது வரவேற்கத்தக்கது.அரசியலுக்கு வருபவர்கள் நேர்மையாக இருக்க வேண்டும். மத்திய அரசு நதிநீர் இணைப்புத் திட்டத்தை செயல்படுத்தும் போது தனது பங்காக ரூ. 1 கோடி நிதியை வழங்குவேன் என்று நடிகர் ரஜினிகாந்த் ஏற்கனவே அறிவித்துள்ளார். மத்திய அரசு நதிநீர் இணைப்பு குறித்த நடவடிக்கைகளை விரைவில் தொடங்கும்.
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க வேண்டும் என்பதற்காகவே ஆழ்கடல் மீன்பிடிப்புக்காக ரூ. 1500 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. மேலும் 750 ஆழ்கடல் மீன்பிடிப் படகுகள் வாங்குவதற்கு கடன் அளிப்பதற்காக முதல் கட்டமாக ரூ. 200 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் அமைப்பதில் காலதாமதம் ஆனதற்கு தமிழக அரசே காரணம். அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன்பெறும் வகையில் அனைத்து வசதிகளும் கொண்ட இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் அமைக்கப்படும் என்றார் பொன். ராதாகிருஷ்ணன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com