பாலில் கலப்படம் செய்வோர் மீது சட்டப்படி நடவடிக்கை: அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி

பாலில் கலப்படம் செய்து தவறிழைக்கும் நிறுவனங்கள் மீது உரிய சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி வியாழக்கிழமை தெரிவித்தார்.
பாலில் கலப்படம் செய்வோர் மீது சட்டப்படி நடவடிக்கை: அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி

பாலில் கலப்படம் செய்து தவறிழைக்கும் நிறுவனங்கள் மீது உரிய சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி வியாழக்கிழமை தெரிவித்தார்.
சட்டப் பேரவையில் கேள்வி நேரத்தின் போது எதிர்க்கட்சி துணைத் தலைவர் மு.க.ஸ்டாலின் துணைக் கேள்வி எழுப்பினார். அப்போது பேசிய அவர், பாலில் கலப்படம் செய்து சிக்குவோர் நீதிமன்றம் சென்று தப்பித்துக் கொள்வதாக அரசின் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இதைத் தடுப்பதற்கான முயற்சியில் அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன என்றார்.
இதற்கு பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி அளித்த பதில்: ஒரு சில தனியார் நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் பாலில் ரசாயனக் கலப்பு இருப்பதாகக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் பால் மாதிரிகளைப் பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டது. அதன்படி, பால் மாதிரிகளில் ரசாயனக் கலப்பு இருப்பதும் அவை பாதுகாப்பற்றவை என்பதும் கண்டறியப்பட்டன.
பால் மாதிரிகள் விரிவான தர பரிசோதனைக்காக மைசூரு மற்றும் புணேவில் உள்ள மத்திய அரசின் ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்தப் பிரச்னை தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் தொடரப்பட்டன. நீதிமன்றம் அறிவுறுத்தியபடி சுகாதாரம், கால்நடை பராமரிப்புத் துறைகளின் செயலாளர்கள், நீதிமன்றத்தில் பதில் மனு மற்றும் இப்போதைய நிலை குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளனர்.
நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மற்றொரு வழக்கில் கூறப்பட்ட உத்தரவின்படி, மாநில, மாவட்ட அளவிலான குழுக்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. மாவட்ட அளவிலான குழு மாதந்தோறும் கூடி முடிவெடுக்கும். மாநில அளவிலான குழு தேவை அடிப்படையில் முடிவுகளை எடுக்கும்.
உணவு தரக் கட்டுப்பாட்டு சோதனை: உணவு தர நிர்ணய சட்டத்தின் கீழ், 32 மாவட்டங்களில் 886 பால் மாதிரிகள் எடுத்து சோதிக்கப்பட்டன. அதில், 187 பால் மாதிரிகள் தரம் குறைந்ததாக அறியப்பட்டன. மேலும், 338 பால் பொருள்களின் மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதித்ததில் 11 பொருள்களின் மாதிரிகள் பாதுகாப்பு இல்லாதவை எனவும், 132 தரம் குறைந்ததாகவும் அறியப்பட்டன.
பால் கலப்படப் பரிசோதனைக்காக இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர அதிகார அமைப்பானது தமிழகத்துக்கு மின்னணு பால் பரிசோதனைக் கருவியை வழங்கியுள்ளது. அதன்மூலம், சென்னையில் 20 பால் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.
அதில், ஒன்று பாதுகாப்பற் ôகவும், மற்றொன்று தரமற் ôகவும் இருந்தது. இந்தக் கருவி உதவியுடன் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து சோதனைகள் நடைபெற்று வருகின்றன.
தவறு செய்யும் நிறுவனங்கள் மீது உரிய சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com