64 கிராம் எடையுள்ள செயற்கைக்கோளை தயாரித்த மாணவர்களுக்கு ரூ.10 லட்சம்: முதல்வர் எடப்பபாடி பழனிசாமி

வானிலையை ஆராயும் 64 கிராம் எடையுள்ள மிகச் சிறிய செயற்கைக்கோளைத் தயாரித்த ரிஃபாத் தலைமையிலான மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
மிகச் சிறிய செயற்கைக்கோளை உருவாக்கிய கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியை சேர்ந்த ரிஃபாத் சாருக் தலைமையிலான ஆறு மாணவர்களின் சாதனையைப் பாராட்டி தமிழக சட்டப்பேரவையில் ஊக்கத் தொகை அறிவித்து பேசுகிறார் முதல்வர்.

சட்டப்பேரவையில் சனிக்கிழமை 110-ஆவது விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு:
கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியைச் சேர்ந்த 18 வயது இளைஞரான ரிஃபாத் சாருக் தலைமையிலான ஆறு மாணவர்கள் கொண்ட குழுவினர் 64 கிராம் எடையுள்ள மிகச் சிறிய செயற்கைக்கோள் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
இந்தச் செயற்கைக்கோள் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா நடத்திய போட்டியில் உலகத்தின் 57 நாடுகளிலிருந்து சமர்ப்பிக்கப்பட்ட 80 ஆயிரம் மாதிரிகளில் முதல் பரிசு பெற்றது.
"கலாம் சாட்' என்ற பெயரில் இந்த செயற்கைக்கோள் நாசா ஏவுதளத்திலிருந்து ஜூன் 22-இல் விண்ணில் ஏவப்பட்டது.
முப்பரிமாண அச்சுத் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இந்த செயற்கைக்கோள் வானிலை, வான்வெளியில் உள்ள கதிர்வீச்சு, வெப்பம் ஆகியவற்றை ஆராயும் திறன் கொண்டது.
சென்னையிலிருந்து செயல்படும் ஸ்பேஸ்கிட்ஸ் என்ற அமைப்பு இந்த மாணவர்களுக்கு ஆக்கமும், ஊக்கமும் அளித்து உதவியது. இந்தச் சாதனையை நிகழ்த்திய மாணவர்கள் ரிஃபாத் சாருக், யக்னா சாய், வினய் பரத்வாஜ், தனிஷ்க் திவேதி, கோபிநாத், முகம்மது அப்துல் காசிப் ஆகியோருக்கும், குறிப்பாக அந்தக் குழுவின் தலைமை விஞ்ஞானியாகச் செயல்பட்ட ரிஃபாத் சாருக்குக்கும் தமிழக அரசின் சார்பிலும், எனது தனிப்பட்ட முறையிலும் வாழ்த்துகள்.
இந்தியாவிற்கும் தமிழகத்துக்கும் பெருமை தேடித் தந்த மாணவர் ரிஃபாத் சாருக் தலைமையிலான மாணவர் குழுவினர் மேலும் இதுபோன்ற பல சாதனைகளைச் செய்ய ஊக்கப்படுத்தும் விதமாக தமிழக அரசின் சார்பில் ரூ.10 லட்சம் வழங்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com