தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் இலங்கைத் தமிழ் பெண்களுக்கும் 8 கிராம் தங்கம்: அமைச்சர் சரோஜா

தமிழக முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழ்ப் பெண்களுக்கும் மூவலூர் ராமாமிர்தம் நினைவு திருமண உதவித் திட்டத்தின் கீழ் தாலிக்கு 8 கிராம் தங்கம் வழங்கப்படும்
தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் இலங்கைத் தமிழ் பெண்களுக்கும் 8 கிராம் தங்கம்: அமைச்சர் சரோஜா

தமிழக முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழ்ப் பெண்களுக்கும் மூவலூர் ராமாமிர்தம் நினைவு திருமண உதவித் திட்டத்தின் கீழ் தாலிக்கு 8 கிராம் தங்கம் வழங்கப்படும் என்று சமூகநலத் துறை அமைச்சர் வி.சரோஜா சனிக்கிழமை அறிவித்தார்.
சமூக நலம் மற்றும் சத்துணவுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதிலளித்து அமைச்சர் சரோஜா வெளியிட்ட அறிவிப்புகள்:
சென்னை கெல்லீஸில் உள்ள சிறுமியர்களுக்கான அரசு கூர்நோக்கு இல்லத்துக்கு ரூ.4.40 கோடி செலவில் புதிய கட்டடம் கட்டப்படும். மகளிர் நலனுக்கென தொழில்நுட்ப வசதியுடன் கூடிய சமுதாய உதவி மையம் முதல் கட்டமாக 16 மாவட்டங்களில் ரூ.1 கோடி செலவில் ஏற்படுத்தப்படும்.
பிரஷர் குக்கர்: 12 லிட்டர் கொள்ளளவு உள்ள பிரஷர் குக்கர் 19,230 சத்துணவு மையங்களுக்கு ரூ.4.80 கோடியில் புதிய சமையல் உபகரணங்கள் தலா ரூ.5,000 வீதம் 12 ஆயிரம் சத்துணவு மையங்களுக்கு ரூ.6 கோடி செலவிலும் ஆக ரூ.10.80 கோடி செலவில் வழங்கப்படும். தமிழ்நாடு சமூக நல வாரியத்தால் நடத்தப்பட்டு வந்த 892 குழந்தைகள் காப்பகங்களை மாநில அரசின் நிதி ரூ.4.6 கோடி செலவில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் இயக்குநரகத்தின் மூலம் செயல்படுத்தப்படும்.
கொடுஞ்செயல் எதிர்ப்பு: முதியோருக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தினம் ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 15-ஆம் நாளன்று அனுசரிக்கப்படும்.
பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், பெண் குழந்தை திருமணங்களைத் தடுக்கவும் பாடுபட்டு வீரதீரச் செயல்புரிந்த 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு தேசிய பெண் குழந்தை தினமான ஜனவரி 24-இல் பாராட்டுப் பத்திரமும், ரூ.1 லட்சத்துக்கான காசோலையும் வழங்கப்படும்.
தாலிக்குத் தங்கம் திட்டம்: மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டத்தின் கீழ் திருமண நிதி உதவித் தொகை ரூ.25 ஆயிரம், ரூ.50 ஆயிரத்துடன் 8 கிராம் தாலிக்கு தங்க நாணயம் வழங்கப்படுகிறது. இத்திட்டம் தமிழகத்தில் உள்ள தகுதியான முகாம் வாழ் இலங்கை பெண்களும் பயன்பெறும் வகையில் விரிவுபடுத்தப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com