ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்குக் கோரி நாளை முதல் 3 நாள்களுக்கு நெசவு தொழிற்கூடங்கள் மூடல்

ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு அளிக்க வலியுறுத்தி வரும் ஜூன் 27,28,29 ஆகிய தேதிகளில் நெசவு தொழிற்கூடங்கள் மூடப்பட உள்ளன.

ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு அளிக்க வலியுறுத்தி வரும் ஜூன் 27,28,29 ஆகிய தேதிகளில் நெசவு தொழிற்கூடங்கள் மூடப்பட உள்ளன.
சேலம், நாமக்கல் ஜவுளி வியாபாரிகள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சேலம் கைத்தறி ஜவுளி மொத்த வியாபாரிகள் சங்க செயலர் ரவீந்திரன் தலைமை வகித்தார். கூட்டத்தில் சங்கத்தின் தலைவர் முருகன் பேசியது:
விவசாயத் தொழிலுக்கு அடுத்து நெசவுத் தொழில் உள்ளது. தற்போது வரை நெசவுத் தொழிலுக்கு எந்த வரியும் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் ஜிஎஸ்டி}யில் 5 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.
நெசவுத் தொழிலை பொருத்தவரையில் நூலை வாங்கி, அதை துணியாக மாற்றும் வரை பல்வேறு தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ளனர். ஜிஎஸ்டி வரி விதிப்பு மூலம் சிறு வியாபாரிகள், தொழிலாளர்கள் மற்றும் நெசவாளர்கள் என அதிகளவில் பாதிக்கப்படுவர்.
மேலும் ஒவ்வொரு இடங்களில் வரி விதிப்பதன் மூலம் ஜவுளி விலை உயரும். எனவே, நெசவுத் தொழிலுக்கு ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு அளிக்க வலியுறுத்தி வரும் 27, 28, 29 ஆகிய தேதிகளில் நெசவு சார்ந்த தொழிற்கூடங்கள் மூடப்படும்.
சேலம், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள், மொத்த வியாபாரிகள் என 30 லட்சம் பேர் பங்கேற்பர். மேலும், வரும் 30ஆம் தேதி முதல் நெசவு தொழிற்கூடங்களில் கருப்புக் கொடி ஏற்றி வைத்துப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரைச் சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com