மாநில வலுதூக்கும் போட்டி: மன்னார்குடி வீரர் இரும்பு மனிதராக தேர்வு

மாநில அளவிலான வலுதூக்கும் போட்டியில் மன்னார்குடி வீரர் இரும்புமனிதராகத் தேர்வு செய்யப்பட்டார்.

மாநில அளவிலான வலுதூக்கும் போட்டியில் மன்னார்குடி வீரர் இரும்புமனிதராகத் தேர்வு செய்யப்பட்டார்.

தமிழ்நாடு மாநில வலுதூக்கும் சங்கம், சேலம் மாவட்ட வலுதூக்கும் சங்கம், மன்னார்குடி ஆஞ்சநேயா பவர்ஜிம் ஆகியவை இணைந்து, சேலத்தில் மாநில அளவிலான மூத்தோர் வலுதூக்கும் போட்டியை நடத்தின. இதில் மன்னார்குடி வீரர் பி.கோவிந்தசாமி நிகழாண்டின் இரும்பு மனிதராக தேர்வு செய்யப்பட்டார்.
சேலம் நேரு விளையாட்டு அரங்கில், மாநில அளவிலான மூத்தோர் வலுதூக்கும் போட்டி ஜூன் 24, 25 ஆகிய இரண்டு நாள்கள் நடை
பெற்றன.
இதில் மாநிலம் முழுவதிலுமிருந்து 270 வீரர்கள் கலந்துகொண்டனர். ஆண், பெண்களுக்கு என தனித்தனியே போட்டிகள் நடைபெற்றன.
இதில் மன்னார்குடி ஆஞ்சநேயா பவர்ஜிம்மைச் சேர்ந்த வீரர்கள் வி.எஸ்.யோகேஸ்வரன், கே.யுவராஜ், பி.கோவிந்தசாமி, கே.ஏ.குகன், என்.அஜித், மகேந்திரன், முத்துக்குமார், வினோத், குமார், பி.மனோஜ், பி.அருண்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதில் 59 கிலோ பிரிவில் வி.எஸ்.யோகேஸ்வரன் 3 }ஆம் இடத்தையும்,, 74 கிலோ எடை பிரிவில் கே.யுவராஜ் 2}ஆம் இடத்தையும், 66 கிலோ எடை பிரிவில் பி. கோவிந்தசாமி முதலிடத்தையும், 120 கிலோ எடை பிரிவில் கே.ஜி.குகன் 3 }ஆம் இடத்தையும்
பெற்றனர்.
அதிக புள்ளிகள் பெற்ற அளவில் மன்னார்குடி ஆஞ்சநேயா பவர்ஜிம் வீரர்கள் மாநில அளவில் இரண்டாமிடத்தைப் பெற்றதுடன் நிகழாண்டின் இரும்பு மனிதராக மன்னார்குடி வீரர் பி.கோவிந்தசாமி தேர்வு செய்யப்பட்டார்.
சிறப்பிடம் பெற்றவர்களை வலுதூக்கும் சங்கத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com