மீஞ்சூரில் துணை மின் நிலையம் அமைக்கப்படுமா?

மீஞ்சூரில் அவ்வப்போது ஏற்படும் மின் வெட்டைத் தவிர்க்க துணை மின் நிலையம் அமைக்க வேண்டும் என்ற அப்பகுதி மக்களின் கோரிக்கை கண்டு கொள்ளப்படாமல் உள்ளது.
மீஞ்சூரில் துணை மின் நிலையம் அமைக்கப்படுமா?

மீஞ்சூரில் அவ்வப்போது ஏற்படும் மின் வெட்டைத் தவிர்க்க துணை மின் நிலையம் அமைக்க வேண்டும் என்ற அப்பகுதி மக்களின் கோரிக்கை கண்டு கொள்ளப்படாமல் உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் உள்ளது மீஞ்சூர் பேரூராட்சி. இதன் எல்லைக்குள் 19 ஆயிரம் குடியிருப்புகள், வங்கிகள், 1,500 வணிக நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் 10}க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள் அமைந்துள்ளன.
மீஞ்சூரில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மின்சார இணைப்பைப் பெற்று, பயன்படுத்தி வருகின்றனர். மீஞ்சூரில் இருந்து 3 கி.மீ. தூரமுள்ள மேலூரில் உள்ள துணை மின் நிலையத்தில் இருந்து இப்பகுதிக்கு மின் விநியோகம் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மேலூர் துணை மின் நிலையத்தில் இருந்து மீஞ்சூர் நகருக்கு சீரான முறையில் மின் விநியோககிம் செய்யப்படாததால் அவ்வப்போது மின்தடை ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் இரவு நேரத்தில் ஏற்படும் மின் தடையால், குழந்தைகள், முதியவர்கள், பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். அதிக குடியிருப்புகள் உள்ள மீஞ்சூரில் துணை மின் நிலையம் அமைத்து சீரான மின் விநியோகம் செய்ய அப்பகுதி வியாபாரிகளும், பொதுமக்களும் விடுத்த கோரிக்கை கண்டு கொள்ளப்
படாமல் உள்ளது.
இதனிடையே, அரசு நிதி ஒதுக்கியுள்ள போதும், மீஞ்சூர் பேரூராட்சி எல்லைக்குள் துணை மின் நிலையம் அமைக்க நிலம் தேர்வு செய்வதில் ஏற்பட்டுள்ள தாமதத்தால் பணிகள் தொடங்கப்படாமலே உள்ளதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
எனவே, இப்பகுதி மக்களின் நலன் கருதி இங்கு விரைவில் துணை மின் நிலையம் அமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com