அதிமுக பொதுச் செயலாளரை நீக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை: தம்பிதுரை

பொதுக் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுச் செயலாளரை நீக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை என்று அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் தம்பிதுரை தெரிவித்தார்.
அதிமுக பொதுச் செயலாளரை நீக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை: தம்பிதுரை

பொதுக் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுச் செயலாளரை நீக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை என்று அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் தம்பிதுரை தெரிவித்தார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அவர் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:-
அதிமுக தலைமையின் அறிவுறுத்தலின் பேரில்தான் குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்றே ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவளித்தோம். தற்போது தமிழகத்தில் ஆட்சி புரிவது அதிமுகதான். பாஜக கிடையாது.
மேலும், அதிமுகவுக்கு தலைமை யார் என்பதை முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம்தான் கேட்க வேண்டும். அதிமுக தலைமை யார் என்பது மக்களுக்கும், தொண்டர்களுக்கும் தெரியும். பொதுக்குழுவால் நியமிக்கப்பட்ட பொதுச் செயலாளரை நீக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை.
ஆன்மீக நம்பிக்கையால்தான் திமுக-வினர் குளங்களைத் தூர்வாரி வருகின்றனர். கீழடியில் அருங்காட்சியகம் அமைக்கப்படுவதற்கு தமிழக அரசு ஆதரவாகவே உள்ளது. அதிமுகவில் அணிகள் என்பதே இல்லை.
சில கருத்து வேறுபாடுகள் மட்டுமே உள்ளன. ஆனால், ஆட்சியைக் கலைத்து விடலாம் என்று திமுக மனப்பால் குடிக்கிறது.அது நடக்காது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com