கோவை குற்றாலம் நீர் வீழ்ச்சியில் செவ்வாய்க்கிழமை பெருக்கெடுத்த வெள்ளம்.
கோவை குற்றாலம் நீர் வீழ்ச்சியில் செவ்வாய்க்கிழமை பெருக்கெடுத்த வெள்ளம்.

கோவை குற்றாலத்தில் வெள்ளப் பெருக்கு

மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்து வரும் மழை காரணமாக கோவை குற்றாலம் நீர் வீழ்ச்சிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத் துறையினர் செவ்வாய்க்கிழமை தடை விதித்து உள்ளனர்.

மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்து வரும் மழை காரணமாக கோவை குற்றாலம் நீர் வீழ்ச்சிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத் துறையினர் செவ்வாய்க்கிழமை தடை விதித்து உள்ளனர்.

கோவையில் இருந்து சுமார் 40 கிலோ மீட்டர் மேற்கே இயற்கை எழில் சூழ்ந்த வனப் பகுதியில் அமைந்துள்ளது கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சி.
இந்த நீர்வீழ்ச்சி வனத் துறையினர் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த நீர்வீழ்ச்சிக்கு மேற்குத் தொடர்ச்சி மலையின் குஞ்சாறா என்ற மலை முகட்டில் இருந்து நீர் வருகிறது .
இந்த நிலையில், கடந்த சில நாள்களாக அப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சிக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்திருந்தது.
இந்த நிலையில், நீர்வீழ்ச்சியில் திங்கள்கிழமை இரவு முதல் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக் கருதி நீர்வீழ்ச்சிக்குச் செல்லவும், குளிக்கவும் வனத் துறையினர் செவ்வாய்க்கிழமை தடை விதித்தனர்.
மேலும், தற்போதைய நிலையே நீடித்தால் இன்னும் சில நாள்களுக்கு நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல விதிக்கப்பட்ட தடை நீடிக்கும் என்று போளுவாம்பட்டி வனச் சரகர் தினேஷ்குமார் தெரிவித்தார்.
நொய்யலிலும் நீர் வரத்து: கோவை மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளிலும் ஓரளவு மழை பெய்து வருவதால் நொய்யல் ஆற்றிலும் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com