ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு எதிர்ப்பு: 1.5 லட்சம் விசைத்தறிக் கூடங்கள் அடைப்பு, 600 ஜவுளிக் கடைகள் மூடல்

ஜி.எஸ்.டி. வரி விதிப்பைக் கண்டித்து, சேலத்தில் சுமார் 600 ஜவுளிக் கடைகளும், மாவட்டம் முழுவதும் சுமார் 1.5 லட்சம் விசைத்தறிக் கூடங்களும் அடைக்கப்பட்டன.
ஜிஎஸ்டி வரிவிதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வேலைநிறுத்தத்தின்போது நிறுத்தப்பட்டிருந்த விசைத்தறிக் கூடம்.
ஜிஎஸ்டி வரிவிதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வேலைநிறுத்தத்தின்போது நிறுத்தப்பட்டிருந்த விசைத்தறிக் கூடம்.

ஜி.எஸ்.டி. வரி விதிப்பைக் கண்டித்து, சேலத்தில் சுமார் 600 ஜவுளிக் கடைகளும், மாவட்டம் முழுவதும் சுமார் 1.5 லட்சம் விசைத்தறிக் கூடங்களும் அடைக்கப்பட்டன.
ஜவுளிக்கு மத்திய அரசு 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து சேலம், நாமக்கல் மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் செவ்வாய்க்கிழமை முதல் தொடர்ந்து 3 நாள்களுக்கு கடையடைப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
சேலத்தில் பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், முதல் அக்ரஹாரம், அருணாச்சல ஆசாரி தெரு உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் 600}க்கும் மேற்பட்ட ஜவுளி விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
அதேபோல் அம்மாப்பேட்டை, குகை, கொண்டலாம்பட்டி உள்ளிட்ட இடங்களில் உள்ள தறிக்கூடங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் சுமார் 1.5 லட்சம் விசைத்தறிகள் இயங்கவில்லை. இதன் மூலம் சுமார் 8 லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர்.
இந்த போராட்டத்தின் மூலம் நாளொன்றுக்கு சுமார் ரூ.10 கோடி வரை வர்த்தகம் பாதிக்கும் என்றும், மூன்று நாள்களுக்கு சுமார் ரூ.30 கோடி வியாபாரம் பாதிக்கும் எனவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, சேலம் கைத்தறி மொத்த ஜவுளி வியாபாரிகள் சங்கத் தலைவர் முருகன் கூறி ய து: ஜவுளி உற்பத்தி செய்யும் தறி தொழிலாளர்கள் குடிசைத் தொழில ô க இத்தொழிலை செய்து வருகின்றனர். அவர்கள் உற்பத்தி செய்யும் துணிகளை சிறுவியாபாரிகள் மூலம் விற்பனை செய்து வருகின்ற னர்.
ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் சிறுவியாபாரிகள் விற்பனை செய்யும்போது, அவர்கள் வரி செலுத்த வேண்டிய நிலை உள்ளதால், விசைத்தறி உரிமையாளர்களிடம் அவர்கள் கொண்டுள்ள தொழில் பாதிக்கும்.
இதனால், விவசாயிகளைப் போல நெசவுத் தொழிலாளர்களும் தற்கொலை செய்யும் சூழல் ஏற்படும்.
மேலும், வெளி நாடுகளில் ஜவுளித் தொழில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அங்கிருந்து இந்தியாவுக்கு ஜவுளி இறக்குமதியாகும். இதனால் ஜவுளித்தொழில் நலிவடைந்து விடும். எனவே 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிப்பை ரத்து செய்ய வேண்டும்.
வரும் ஜூலை 1}ஆம் தேதி இதற்கான அறிவிப்பு வெளியிடப்படாவிட்டால், அகில இந்திய டெக்ஸ்டைல்ஸ் சம்மேளனம் வழிகாட்டுதல்படி அடுத்தக்கட்ட போராட்டம் தொடரும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com