’பத்திரப் பதிவுக்கான தடை அங்கீகரிக்கப்படாத நிலங்களுக்கு மட்டுமே பொருந்தும்'

பத்திரப் பதிவுக்கான தடை என்பது அங்கீகரிக்கப்படாத நிலங்களுக்கு மட்டுமே பொருந்தும் என சென்னை உயர் நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.

பத்திரப் பதிவுக்கான தடை என்பது அங்கீகரிக்கப்படாத நிலங்களுக்கு மட்டுமே பொருந்தும் என சென்னை உயர் நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.
விளை நிலங்களை வீட்டு மனைகளாக ’லே-அவுட்' போட்டு அங்கீகாரமில்லாமல் விற்பனை செய்யும்போது அந்த நிலத்தையோ அல்லது அதில் உள்ள கட்டடத்தையோ பத்திரப் பதிவுத் துறையினர் எந்தவிதக் காரணம் கொண்டும் பதிவு செய்யக்கூடாது என, கடந்தாண்டு செப்.9-இல் சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது.
இந்த வழக்கை தொடுத்த வழக்குரைஞர் யானை ராஜேந்திரன், தனக்கு மிரட்டல் வருவதாக பொறுப்பு தலைமை நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷ், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை முறையீடு செய்தார்.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தனக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். இதற்கு அனுமதி அளித்த நீதிபதிகள், பத்திரப் பதிவுக்கு விதிக்கப்பட்ட தடையானது, ஓட்டுமொத்தமாக அனைத்துச் சொத்துகளையும் பத்திரப் பதிவு செய்ய தடை என்பது அல்ல.
அதாவது, அங்கீகாரமற்ற வீட்டுமனைகள், நிலங்களை பத்திரப் பதிவு செய்யும்போது மட்டுமே இந்தத் தடை உத்தரவு பொருந்தும். இது தொடர்பான சட்டங்கள் மிகவும் பழமையானது என்பதை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மேலும் சாலை உள்ளிட்ட பிற உள் கட்டமைப்பு வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டும் என்பதையும் அதிகாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, இந்த விவகாரத்தில் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com