ஆர்.கே.நகரில் அதிமுக 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும்: திண்டுக்கல் சீனிவாசன்

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் அதிமுக துணைப் பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன் சுமார் ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என, வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் அதிமுக துணைப் பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன் சுமார் ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என, வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் திண்டுக்கல் மாவட்டக் கிளை சார்பில், பழனியில் ஞாயிற்றுக்கிழமை மாவட்ட மாநாடு நடைபெற்றது. மாநாட்டுக்கு, மாநில துணைச் செயலர் காளிமுத்து தலைமை வகித்தார்.
இம்மாநாட்டில் சிறப்பு விருந்தினராக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பங்கேற்று பேசினார். பின்னர், அவர் செய்தியாளர்களிடையே தெரிவித்ததாவது:
ஆசிரியர்களின் கோரிக்கைகள் நியாயமானவை. அவற்றை, கல்வி அமைச்சர், முதல்வர் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டு தீர்வு காணப்படும். ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக துணைப் பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன் 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். அதேபோல், இரட்டை இலை சின்னமும் எங்களுக்குத் தான் என்றார்.
முன்னதாக, மாநாட்டில் ஆசிரியர் கூட்டணி மாநிலப் பொதுச் செயலர் ரெங்கராஜன் சிறப்புரையாற்றினார். பின்னர், அவர் அளித்த பேட்டி: சிபிஎஸ் எனப்படும் தன்பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அரசு தொடர வேண்டும். ஆறாவது ஊதியக் குழுவில் ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை களைந்த பின்னரே ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை செய்யப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட 22 தீர்மானங்களை அரசு பார்வைக்கு கொண்டு வருவதாகத் தெரிவித்தார்.
பேரணி: மாநாட்டையொட்டி, தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது. மாநாட்டில், மாவட்டத் தலைவர் துரைராஜ், மாவட்டப் பொருளாளர் ஆல்பர்ட் டென்னிஸ், மாநிலச் செயற்குழு உறுப்பினர் லூர்துராஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இதில், மாநிலத் தலைவர் காமராஜ், மாநிலப் பொருளாளர் ஜோசப் சேவியர் மற்றும் மாநில துணைத் தலைவர்கள், மாவட்டச் செயலர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆயிரக்கணக்கான ஆசிரிய, ஆசிரியைகளும் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com