'விஸ்வரூபம்' எடுக்கிறது 'மகாபாரதம்' குறித்த கமலின் பேச்சு..!

இந்துக்களை அவமதிக்கும் வகையிலும் மகாபாரதத்தை இழிவுபடுத்தும் வகையிலும் நடிகர் கமல்ஹாசன் பேசியதாகவும் அவர் மீது வழக்குப் பதிவு
'விஸ்வரூபம்' எடுக்கிறது 'மகாபாரதம்' குறித்த கமலின் பேச்சு..!

இந்துக்களை அவமதிக்கும் வகையிலும் மகாபாரதத்தை இழிவுபடுத்தும் வகையிலும் நடிகர் கமல்ஹாசன் பேசியதாகவும் அவர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி, நெல்லை மாவட்டம், வள்ளியூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்யப்பட்டுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் சமீப காலமாக கருத்து என்ற போர்வையில், சமூக ஊடகங்களான டுவிட்டர். முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளம் மூலமாக பல அதிரடியான கருத்துகளை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கமல், இந்து மதம் குறித்து கருத்து தெரிவித்தார்.

கமலின் இந்தப் பேச்சு, இந்து மதத்தை இழிவு செய்யும் விதமாக இருப்பதாகக் கூறி இந்து மக்கள் கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். இது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்க கோரி சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் ஒன்றும் அளித்தனர். இது திரையுலகினர், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டம், அஞ்சுகிராமத்தைச் சேர்ந்தவர், ஆதிநாத சுந்தரம். இவர், பழவூரில் வியாபாரம்செய்துவருகிறார். பழவூர் வியாபாரிகள் நலச்சங்கத் தலைவராகவும்  தர்ம ரக்ஷண ஸ்மிதி அமைப்பின் ராதாபுரம் வட்டார துணைச் செயலாளராகவும் இருந்து வருகிறார். இவர், இந்த விவகாரம் தொடர்பாக வள்ளியூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இன்று வழக்கு தொடர்ந்துள்ளார்.

மனுவில், தனியார் தொலைக்காட்சியின் பேட்டியில், பெண்கள் பாதுகாப்பு தொடர்பான கேள்வி ஒன்றுக்குப் பதில் அளிக்கையில், இதிகாசமான மகாபாரதத்தில் சூதாடியது தொடர்பாக, அவதூறான கருத்துக்களைத் தெரிவித்தார்.

இந்து மதத்தையும் இந்துக்கள் தெய்வ நூலாக போற்றி வணங்கி வரும் 'மகாபாரதம்' குறித்தும் இழிவான கருத்துகளை தெரிவித்துள்ள நடிகர் கமல் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க காவல்துறையினருக்கு உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

இந்த மனு, மாஜிஸ்ட்ரேட் செந்தில்நாதன் முன்பு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

ஏற்கனவே, இது தொடர்பாக தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வழக்கும் பதிவு செய்யப்பட்டு இருப்பதால், இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்க தொடங்கியிருப்பதாக திரையுலக வட்டாரத்தில் பேசப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com