ஓ.பி.எஸ்.ஸை வரவேற்றது ஏன்? திமுகவுடன் அமைச்சர் காமராஜ் வாக்குவாதம்

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை பேரவையில் மேஜையைத் தட்டி வரவேற்றது ஏன் என்று திமுக உறுப்பினர்களிடம் அமைச்சர் காமராஜ் கேள்வி எழுப்பினார்.
ஓ.பி.எஸ்.ஸை வரவேற்றது ஏன்? திமுகவுடன் அமைச்சர் காமராஜ் வாக்குவாதம்

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை பேரவையில் மேஜையைத் தட்டி வரவேற்றது ஏன் என்று திமுக உறுப்பினர்களிடம் அமைச்சர் காமராஜ் கேள்வி எழுப்பினார்.
நிதிநிலை அறிக்கை மீது திங்கள்கிழமை நடைபெற்ற விவாதத்தில் இந்தப் பிரச்னை குறித்து விவாதிக்கப்பட்டது.
திமுக சட்டப் பேரவை உறுப்பினர் டி.செங்குட்டுவன் பேசும்போது, கடந்த 3 மாதங்களாக ரேஷன் கடைகளில் பாமாயில் கிடைக்கவில்லை. இதற்குக் காரணம், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நீட்டிப்பு வழங்கவில்லை என்று தெரிவீப்பீர்கள். முதல்வராக ஒ.பன்னீர்செல்வம் இருந்தபோதும் நீங்கள்தான் உணவுத்துறை அமைச்சராக இருந்தீர்கள் என்றார்.
இதற்கு அமைச்சர் காமராஜ் பதிலளித்தார். நீங்களும் (திமுக), நீங்கள் சொல்லும் அவரும் (ஓ.பி.எஸ்.) எப்படி நடந்து கொண்டீர்கள் என்பது அனைவருக்கும் தெரியும் என்று பேசிய போது குறுக்கிட்ட எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், நாங்கள் எப்படி நடந்து கொண்டோம் என்பதை அமைச்சர் விளக்க வேண்டும் என்றார். அப்போது திமுக உறுப்பினர்கள் மேஜையைத் தட்டி வரவேற்றனர்.
தனது பேச்சைத் தொடர்ந்து ஸ்டாலின், அமைச்சர் தேவையற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். சலசலப்பை உருவாக்குகிறார். இதனை அவர் திரும்பப் பெற வேண்டும் அல்லது அந்த வார்த்தை அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்றார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் காமராஜ், நீங்கள் (திமுக) கூறும் அவரை (ஓ.பி.எஸ்.,) சட்டப் பேரவையில் மேஜையைத் தட்டி எப்படி வரவேற்றீர்கள் என்பதைத்தான் நான் குறிப்பிட்டேன் என்றார்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த மு.க.ஸ்டாலின், குற்றவாளியின் பெயரைக் குறிப்பிடும் போது நீங்கள் (அதிமுக) எப்படி மேஜையைத் தட்டி வரவேற்றீர்களோ அதுபோல அவர் முதல்வர் என்பதால் வரவேற்றோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com