பிஆர்பி நிறுவனத்துக்கு எதிரான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம்

பிஆர்பி நிறுவன சொத்துக்களை விற்க அனுமதி கோரி வங்கி தரப்பில் தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.

பிஆர்பி நிறுவன சொத்துக்களை விற்க அனுமதி கோரி வங்கி தரப்பில் தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
பிஆர்பி நிறுவனத்திற்கு வழங்கிய கடனுக்குப் பதிலாக தொழிற்சாலையில் உள்ள சொத்துக்களை விற்க அனுமதி வழங்கக்கோரி இந்தியன் வங்கி உதவி பொதுமேலாளர் ஆர்.ஸ்ரீநிவாசன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்திருந்தார். அதில், பிஆர்பி நிறுவனம் மீதான முறைகேடு புகார்களின் அடிப்படையில் அவர்களது வங்கிக் கணக்கை 2013 மார்ச் மாதம் அரசு முடக்கியது. இதனால் அவரது நிறுவனம் சார்பில் எங்கள் வங்கிக்கு அளிக்க வேண்டிய கடன் ரூ.135.08 கோடி வாராக் கடனாக கணக்கு வைக்கப்பட்டது. இந்தக் கடனை திரும்பச் செலுத்தும்படி சர்பாசி சட்டத்தின் கீழ் பி.ஆர்.பழனிச்சாமிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அவரது தொழிற்சாலையில் உள்ள பொருள்கள் அனைத்தும் எங்கள் வங்கியில் பெற்ற கடனுக்கே அடமானம் வைக்கப்பட்டது. எனவே அவற்றை விற்று கடனை நேர் செய்யும் உரிமை எங்களுக்கு உள்ளது. அவர் மீதான வழக்கு விசாரணை தற்போது முடிந்துவிட்டது. எனவே அடமானப் பொருள்கள் விசாரணைக்கு தேவைப்படாது. எனவே அடமான சொத்துக்களை விற்று கடனை நேர் செய்ய உத்தரவிடுமாறு மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பி.வேல்முருகன் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்குரைஞர் ஆஜராகி, கிரானைட் முறைகேடு தொடர்பான வழக்குகள் அனைத்தையும் சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வு விசாரித்து வருகிறது. இதுவும் அதுதொடர்பான வழக்கு என்பதால், இந்த வழக்கையும் அங்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்று கோரினார். இதைப் பதிவு செய்த நீதிபதிகள், வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com