ரூ. 2.25 கோடியில் பூமிக்கு அடியில் மின்கேபிள் பதிக்கும் பணி தொடக்கம்

ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிப் பகுதியில் ரூ. 2.25 கோடி மதிப்பீட்டில் மின் கேபிள்களை பூமிக்கடியில் பதிக்கும் பணி தொடங்கப்பட்டு, முதற்கட்டமாக ராமானுஜர் கோயிலைச் சுற்றி அப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜர் கோயில் அருகில் பூமிக்கு அடியில் நடைபெற்று வரும் மின் கேபிள்கள் பதிக்கும் பணி.
ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜர் கோயில் அருகில் பூமிக்கு அடியில் நடைபெற்று வரும் மின் கேபிள்கள் பதிக்கும் பணி.

ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிப் பகுதியில் ரூ. 2.25 கோடி மதிப்பீட்டில் மின் கேபிள்களை பூமிக்கடியில் பதிக்கும் பணி தொடங்கப்பட்டு, முதற்கட்டமாக ராமானுஜர் கோயிலைச் சுற்றி அப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஆதிகேசவ பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோயிலில் ராமானுஜர் தானுகந்த திருமேனியாக (உற்சவர்) அருள் பாலித்து வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் திருவாதிரைக்கு 9 நாள்களுக்கு முன் தொடங்கி சித்திரை பெருவிழா அவதார உற்சவமாக நடைபெறுவது வழக்கம்.
ராமானுஜரின் 1000-ஆவது ஆண்டு அவதார உற்சவம் ஏப்ரல் 21-ஆம் தேதி தொடங்கி மே1-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து வரும் மே 3-ம் தேதி முதல் 6ம் தேதி வரை 4 நாள்கள் இத்திருக்கோயிலின் அனந்தசரஸ் புஷ்கரணியில் தெப்பத் திருவிழா நடைபெறுகிறது.
இந்நிலையில் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு, தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் ரூ. 2.25 கோடி மதிப்பீட்டில் தேர் செல்லும் காந்தி சாலை, திருமங்கை ஆழ்வார் தெரு, திருவள்ளூர் சாலை ஆகிய பகுதிகளில் சாலைகளின் குறுக்கே செல்லும் மின்கம்பிகளை அகற்றி விட்டு பூமிக்கு அடியில் மின்சார கேபிள்களை பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
மேலும் ராமானுஜர் கோயிலை சுற்றிலும் உள்ள பகுதிகளில் பூமிக்கு அடியில் மின்கேபிள்கள் பதிக்கும் பணியில் தற்போது ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் விஜயகுமார் கூறியது:
ராமானுஜர் கோயிலின் தேர் திருவிழாவின்போது, தேர் தடையின்றி செல்ல சாலையின் குறுக்கே செல்லும் மின்கம்பிகளைத் துண்டிக்க வேண்டியநிலை இருந்தது. இதனால் திருவிழா காலங்களில் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் மின்சாரம் நிறுத்தப்படுவதால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர்.
தற்போது தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் ரூ. 2.25 கோடி மதிப்பீட்டில் பூமிக்கு அடியில் கேபிள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணி பேரூராட்சி பகுதி முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com