கோவை-லண்டன் விழிப்புணர்வு கார் பயண பெண்கள் குழு புதுவை வருகை: துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தொடங்கி வைத்தார்

பெண் உரிமை, ஆளுமைத் திறன் மற்றும் பெண் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விதமாக, கோவையில் இருந்து லண்டனுக்கு கார் மூலம் விழிப்புணர்வு பிரசார பயணம் மேற்கொள்ளும்
கோவை-லண்டன் விழிப்புணர்வு கார் பயண பெண்கள் குழு புதுவை வருகை: துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தொடங்கி வைத்தார்

பெண் உரிமை, ஆளுமைத் திறன் மற்றும் பெண் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விதமாக, கோவையில் இருந்து லண்டனுக்கு கார் மூலம் விழிப்புணர்வு பிரசார பயணம் மேற்கொள்ளும் 4 பேர் பெண்கள் குழு புதுவை வந்தது. அவர்களது பயணத்தை ஆளுநர் கிரண்பேடி தொடங்கி வைத்தார். 

கோவையைச் சேர்ந்த மீனாட்சி அரவிந்த் (45), மூகாம்பிகை ரத்தினம் (37), ருக்மணி,  மற்றும் மும்பையை சேர்ந்த ப்ரியா ராஜ்பால் (52) ஆகிய 4 பெண்களும், பெண்ணுரிமை, பெண் கல்வி,  கோரிக்கையை முன்வைத்து கார் மூலம் நீண்டதூரப் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டனர். 

ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் டெக்சிட்டி, ரோட்டர் ஆக்ருதி, ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்விக் குழுமம், சர்பில் இங்கிலாந்து தலைநகர் லண்டன் வரை சுமார் 70 நாட்கள் விழிப்புணர்வு பிரசார கார் பயணத்தை தமிழக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கோவையில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார். 

இப்பெண்கள் குழு ஞாயிற்றுக்கிழமை மாலை புதுச்சேரி வந்தடைந்தது. இந்நிலையில் இன்று காலை கடற்கரை காந்தி சிலை அருகே அவர்களது கார் பிரசார பயணத்தை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.  மாவட்ட ஆளுநர் ஏ.மணி, உதவி ஆளுநர் வனஜா வைத்தியநாதன், புதுவை நகராட்சி ஆணையர் சந்திரசேகரன், முதன்மை ஒருங்கிணைப்பாளர் குரியச்சன், பெண்கள் ரோட்டரி நிர்வாகிகள் மேரி அன்னா, ரேஷ்மி, கிளாடின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி பெண்கள் ரோட்டரி சங்கம் அவர்களை வரவேற்று தேவையான உதவிகளை செய்தது. மேலும் 10 கார்களில் நகர எல்லை வரை சென்று அவர்களை வழியனுப்பி வைத்தனர்.

கோயம்புத்தூரிலிருந்து கார் மூலம்  புறப்பட்டு இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களை கடந்து,  மியான்மர், சீனா, ரஷ்யா, ஆஸ்திரியா, சுவிடசர்லாந்து, ஜெர்மனி, நெதர்லாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட 24 நாடுகள் வழியாக சுமார் 24 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் பயணம் மேற்கொள்ளப்பட இருக்கிறது. வரும் ஜூன் 5-ம் தேதி லண்டனில் கார் பிரசார பயணம் நிறைவடையும். இந்த சாதனை பயணத்திற்கு 70 லட்சம் ரூபாய் செலவாகும் என அப்பெண்கள் தெரிவித்தனர். 

மேலும் பெண்கள் குழுவினர் கூறுகையில்: பல்வேறு நாடுகள் வழியாக செல்லும் போது, மொழிப் பிரச்னை ஏற்படாமல் இருக்க அந்தந்த நாடுகளில் உள்ள இந்திய தூதர்களுடன் தொடர்பு கொண்டு உதவியை பெறுவோம். எந்த அச்சமும் இன்றி பிரசார பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்வோம் எனத்தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com