"நடிகையாவேன் என்று நினைத்துக்கூட பார்த்ததில்லை'

திரைப்பட நடிகையாவேன் என்று நினைத்துக் கூட பார்த்ததில்லை என்றார் நடிகை சமந்தா.
கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவிகளுடன் நடிகை சமந்தா.
கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவிகளுடன் நடிகை சமந்தா.

திரைப்பட நடிகையாவேன் என்று நினைத்துக் கூட பார்த்ததில்லை என்றார் நடிகை சமந்தா.
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தன்வந்த்ரா- 2017 என்னும் தலைப்பிலான கலை விழா சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக, விழாவை தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் அ. சீனிவாசன் குத்து விளக்கேற்றி தொடக்கி வைத்தார்.
இதில், திரைப்பட பின்னணி பாடகர்கள் கார்த்திக் மற்றும் சத்யபிராகாஷ் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற திரைப்பட நடிகை சமந்தா பேசியது:
நான் சென்னையை சேர்ந்தவள். சென்னையில் உள்ள கல்லூரியில் படிக்கும்போது நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், நடிகர் சூர்யா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது, நடிகையாவேன் என நினைத்துக்கூட பார்த்ததில்லை.
நடிகர் சூர்யாவுடன் பின்னர் இணைந்து நடித்தபோது, இந்த தகவலை அவரிடம் தெரிவித்தேன். மருத்துவர்கள் மீது எனக்கு தனி மரியாதை உண்டு. மாணவர்கள் ஒவ்வொருவரும் லட்சியத்துடன் இருக்க வேண்டும். தொடர்ந்து முயற்சித்தால் அது நிறைவேறும் என்றார் அவர்.
இந்நிகழ்ச்சிகளில், புதுக்கோட்டை கல்வி நிறுவனங்களின் தலைவர் கருப்பையா, மருத்துவக் கல்லூரி டீன் ரெங்கநாதன், கண்காணிப்பாளர் நீலகண்டன், இருக்கை மருத்துவ அலுவலர் பானுமதி, சீனிவாசன் செவிலியர் கல்லூரி முதல்வர் பேச்சியம்மாள், கல்வி நிறுவனங்களின் முதன்மை நிர்வாக அதிகாரி எஸ். நந்தகுமார், பொறியியல் கல்லூரி முதல்வர்கள் இளங்கோவன், வேல்முருகன், தனலட்சுமி சீனிவாசன் பள்ளி முதல்வர்கள் மரியபுஷ்ப தீபா, செல்வமணி, ரேவதி உள்பட மாணவ, மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, ஒருங்கிணைப்பாளர் செல்வக்குமார் மற்றும் மருத்துவக் கல்லூரி ஊழியர்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com