தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி சசிகலா உள்ளிட்ட மூவர் மனு

சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் விதித்த தண்டனையை உறுதிப்படுத்திய தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி அதிமுக (அம்மா அணி) தாற்காலிக பொதுச் செயலாளர் வி.கே. சசிகலா,
தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி சசிகலா உள்ளிட்ட மூவர் மனு

சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் விதித்த தண்டனையை உறுதிப்படுத்திய தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி அதிமுக (அம்மா அணி) தாற்காலிக பொதுச் செயலாளர் வி.கே. சசிகலா, இளவரசி, வி.என்.சுதாகரன் ஆகிய மூவர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் புதன்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மூவர் தரப்பிலும் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தங்களை கர்நாடக உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது சரியல்ல எனக் கூறி விசாரணை நீதிமன்றம் விதித்த தண்டனையை உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி உறுதிப்படுத்தி தீர்ப்பளித்தது. மேலும் தலா ரூ.10 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த வழக்கில் முதலாவதாக குற்றம்சாட்டப்பட்ட ஜெயலலிதா மீது அரசு ஊழியர் என்ற அடிப்படையில் அவர் மீது ஊழல் தண்டனை தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடுக்கப்பட்டது.
இந்நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட காலத்தில் ஜெயலலிதா உயிரிழந்து விட்டதால், அவர் மீதான தண்டனை ரத்தாகி அவருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த ரூ.100 கோடி அபராதமும் ரத்து செய்யப்படுகிறது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
ஆனால், அரசு ஊழியர்கள் அல்லாத எங்கள் மீது ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகளின்படி விதிக்கப்பட்ட தண்டனை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. முதலாவது குற்றம்சாட்டப்பட்ட நபர் இறந்து விட்டதால் அவருக்கான அபராதம் ரத்தாகும் போது, தங்களுக்கும் அதே நிலைப்பாட்டைத்தான் உச்ச நீதிமன்றம் எடுத்திருக்க வேண்டும். ஆனால், ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் தொடுக்கப்பட்ட இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நபர் உயிரிழந்து விட்டால், அவர் தொடர்புடைய வழக்கும் முடிக்கப்பட்டதாக கருத வேண்டும் என்ற அம்சங்களை தீர்ப்பு வழங்கும் போது உச்ச நீதிமன்றம் கவனத்தில் கொள்ளவில்லை என கருதுகிறோம். எனவே, அத்தீர்ப்பை மறுஆய்வு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com