வடபழனி குடியிருப்பில் தீ விபத்து: அது அங்கீகாரம் பெறாத கட்டிடம் என்று மாநகராட்சி தகவல்!  

சென்னை வடபழனி தெற்கு சிவன் கோயில் தெருவில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்ட குடியிருப்பானது அங்கீகாரம் பெறாமல் கட்டப்பட்ட  கட்டிடம் ..
வடபழனி குடியிருப்பில் தீ விபத்து: அது அங்கீகாரம் பெறாத கட்டிடம் என்று மாநகராட்சி தகவல்!  

சென்னை: சென்னை வடபழனி தெற்கு சிவன் கோயில் தெருவில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்ட குடியிருப்பானது அங்கீகாரம் பெறாமல் கட்டப்பட்ட  கட்டிடம் என்று மாநகராட்சி தற்பொழுது தகவல் வெளியிட்டுள்ளது.

சென்னை வடபழனி தெற்கு சிவன் கோயில் தெருவில் உள்ள குடியிருப்பில் இன்று அதிகாலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. குடியிருப்பின் வாகனம் நிறுத்தும் இடத்தில் பற்றிய தீ மளமளவென்று குடியிருப்பின் முதல் தளத்துக்குப் பரவியது. இங்கு இரண்டு குடும்பத்தினர் வசித்து வந்தனர். இதில் புகைமூட்டத்தால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு இரண்டு வீடுகளில் தூங்கிகொண்டிருந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 6 பேர் உடனடியாக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மீனாட்சி (60), செல்வி (35), சந்தியா (10), சஞ்சய் (30) ஆகியோர்  உயிரிழந்தவர்கள்  என்பது தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் தீ விபத்து ஏற்பட்ட குடியிருப்பானது அங்கீகாரம் பெறாமல் கட்டப்பட்ட  கட்டிடம் என்று மாநகராட்சி தற்பொழுது தகவல் வெளியிட்டுள்ளது.இது தொடர்பாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்படுவதாவது:

சென்னை வடபழனி தெற்கு சிவன் கோயில் தெருவில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்ட குடியிருப்பானது அங்கீகாரம் பெறாமல் கட்டப்பட்ட  கட்டிடமாகும். இதன் கட்டுமானத்திற்கு எம்.எம்.டி.ஏ அல்லது சென்னை மாநகராட்சி என எந்த அமைப்பின் அனுமதியும் பெறப்படவே இல்லை. அத்துடன் இந்த கட்டிடத்திற்கு மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்பு பெற்றது குறித்து எங்களுக்கு எந்த தகவலும் வழங்கப்படவில்லை.

இதன் காரணமாக 2004-ல் கட்டப்பட்ட அந்த கட்டிடமானது, 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அது 'சீல்' வைக்கப்பட்டது. இத்தகைய கட்டிடங்களை வரன்முறைப்படுத்துவது தொடர்பான் வழக்கானது தற்பொழுது சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே நீதிமன்ற வழிகாட்டுதலின்படிதான் நாங்கள் செயல்பட முடியும்.

இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com