குமரி மாவட்டத்தில் நிறுத்தப்பட்ட கேரள பேருந்துகளை மீண்டும் இயக்க நடவடிக்கை

குமரி மாவட்டத்தில் நிறுத்தப்பட்ட கேரள மாநில அரசுப் பேருந்துகளை மீண்டும் இயக்க அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

குமரி மாவட்டத்தில் நிறுத்தப்பட்ட கேரள மாநில அரசுப் பேருந்துகளை மீண்டும் இயக்க அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

கேரள தலைநகரான திருவனந்தபுரத்திலிருந்து குமரி மாவட்டம் நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு கேரள மாநில அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில் நாகர்கோவில், கன்னியாகுமரி, தலக்குளம் தவிர இதரப் பகுதிகளான திற்பரப்பு, பேச்சிப்பாறை, அருமனை, குளச்சல், திங்கள்சந்தை, தேங்காய்ப்பட்டினம் ஆகிய இடங்களுக்கு  இயக்கப்பட்டு வந்த அனைத்துப் பேருந்துகளையும் கடந்த சில ஆண்டுகளாக அம்மாநில போக்குவரத்துக் கழகம் நிறுத்தி விட்டது.

இப்பேருந்துகளுக்கு இணையாக திருவனந்தபுரத்துக்கு  தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள்   தொடர்ந்து இயக்கப்பட்டு வருகின்றன.

ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போரிட்ட வேலுத்தம்பி பிறந்த ஊரான தலக்குளத்திற்கும், அவர் உயிர்நீத்த இடமான கேரள மாநிலம் மண்ணடியையும் இணைத்து கேரள மாநில அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்து தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது.

அதேவேளையில் இதற்கு இணையாக இயக்கப்பட்டு வந்த தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்து நிறுத்தப்பட்டு விட்டது.

இந்நிலையில் குமரி மாவட்டத்தில் நிறுத்தப்பட்ட கேரள மாநில அரசு போக்குவரத்துக் கழக  பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டுமென மலையாளிகள் அமைப்புகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் நிறுத்தப்பட்ட இப்பேருந்துகளை மீண்டும் இயக்க கேரள மாநில போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதுகுறித்து நெய்யாற்றின்கரை பேரவைத் தொகுதி உறுப்பினர் ஆன்சலன் கூறியதாவது:
தற்போது நெய்யாற்றின்கரை பணிமனை மாதிரி பணிமனையாக தரம் உயர்த்தப்படுகிறது. தற்போது 104 பேருந்துகள் நெய்யாற்றின்கரை பணிமனையிலிருந்து இயக்கப்படுகின்றன. இதை 125 ஆக அதிகரிக்க அரசு முடிவு செய்துள்ளது. கூடுதல் பேருந்துகள் பணிமனையில் வரும் நிலையில் குமரி மாவட்டத்தில் இயக்கப்பட்டு நிறுத்தப்பட்ட பேருந்துகள் மீண்டும் இயக்கப்படும். வரும் ஆகஸ்ட் மாதத்தில் நிறுத்தப்பட்ட தடங்களில் மீண்டும் பேருந்துகள்  இயங்கும் வகையில் ஒப்பந்தம் புதுப்பிக்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com