நீட் வினாத்தாள்கள் மாறுபட்டதன் பின்னணியில் அரசியலா? கல்வியாளர்கள் சந்தேகம்

நீட் வினாத்தாள்களில் ஒவ்வொரு மொழி வினாத்தாள்களும் வேறுபட்டு இருப்பதன் பின்னணியில் ஏதேனும் அரசியல் உள்நோக்கம் இருக்கிறதோ என்று கல்வியாளர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
நீட் வினாத்தாள்கள் மாறுபட்டதன் பின்னணியில் அரசியலா? கல்வியாளர்கள் சந்தேகம்


சென்னை: நீட் வினாத்தாள்களில் ஒவ்வொரு மொழி வினாத்தாள்களும் வேறுபட்டு இருப்பதன் பின்னணியில் ஏதேனும் அரசியல் உள்நோக்கம் இருக்கிறதோ என்று கல்வியாளர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

மருத்துவ சேர்க்கைக்கான பொது நுழைவுத் தேர்வான நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம் உட்பட 10 மொழிகளில் நடத்தப்பட்டது. இதில் 10 மொழிகளிலும், 10 விதமான வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டிருப்பது தேர்வுக்குப் பிறகு தெரிய வந்துள்ளது.

இது குறித்து தமிழக கல்வியாளர்கள் கூறுகையில், 10 மொழிகளிலுமே, குஜராத் மொழியில் தேர்வெழுதிய மாணவ, மாணவிகளுக்கு மிகவும் எளிதான வினாத்தாள் வழங்கப்பட்டுள்ளது.

அதே சமயம், மேற்கு வங்க மாநிலத்தில் பெங்காலி மொழியில் தேர்வெழுதிய மாணவ, மாணவிகளுக்கு மிகக் கடினமான வினாத்தாள் வழங்கப்பட்டுள்ளது.

இதைப் பார்க்கும் போது, மத்திய அரசுக்கு ஆதரவு தரும் மாநிலத்துக்கு சலுகையும், எதிர்க்கும் மாநிலத்துக்கு சிரமத்தையும் ஏற்படுத்த முயலும் விஷயம் இருக்குமோ, நீட் தேர்வின் பின்னணியில் அரசியல் இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது. அரசியல் இல்லை என்றால் வேறு ஏதோ ஒரு காரணம் நிச்சயம் இருக்க வேண்டும்.

மேலும், 10 மொழிகளிலும் வேறு வேறு வினாத்தாள்கள் தயாரிக்கப்படும் என்று சிபிஎஸ்இ நிர்வாகம் ஒரு முறை கூட வெளியிடப்படவில்லை. இதில், ஆங்கில வினாத்தாள் தயாரிக்கப்பட்ட, அது மற்ற மொழிகளில் மொழி பெயர்க்கப்பட வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவும் மீறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கான புத்தகமே இல்லை. அதனால் தமிழ் வழியில் படித்த மாணவர்கள் கூட, ஆங்கிலத்தில் தேர்வெழுத பல ஆயிரங்கள் கொடுத்து பயிற்சி எடுத்தனர். ஆனால் தற்போது மாறுபட்ட வினாத்தாள்கள் வழங்கப்பட்டிருப்பது அவர்களுக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் நீட் தேவை ரத்து செய்துவிட்டு மறு தேர்வு நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com