பி.எஸ்.என்.எல். நிறுவனத்தால் திணிக்கப்படும் புதிய சேவை: அன்புமணி கண்டனம்

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தால் திணிக்கப்படும் புதிய சேவை: அன்புமணி கண்டனம்

பி.எஸ்.என்.எல். நிறுவனம் வாடிக்கையாளர்களின் ஒப்புதலைப் பெறாமல் வழங்கும் புதிய திட்டத்துக்கு பாமக இளைஞரணித் தலைவர் அன்புணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பி.எஸ்.என்.எல். நிறுவனம் வாடிக்கையாளர்களின் ஒப்புதலைப் பெறாமல் வழங்கும் புதிய திட்டத்துக்கு பாமக இளைஞரணித் தலைவர் அன்புணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். நிறுவனம் ஹங்கமா சேவை என்ற பெயரில் வாடிக்கையாளர்களின் ஒப்புதலைப் பெறாமல் மாதந்தோறும் ரூ.562 கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்தத் திட்டத்தின்படி, வாடிக்கையாளர்களுக்கு விளையாட்டுகள், திரைப்படங்கள், இசை ஆகியவை வழங்கப்படும்.
பி.எஸ்.என்.எல் நுகர்வோர் சேவை மையத்திலிருந்து தொடர்பு கொள்ளும் ஊழியர்கள், இந்தச் சேவையைப் பெற விருப்பமா என்று வினவுகின்றனர். சேவை தேவையில்லை என்று பதில் அளித்தாலும் அது வழங்கப்படுகிறது. இன்னும் சில இடங்களில் வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொள்ளாமலேயே அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் கடந்த மாதம் 24,370 இணைப்புகளுக்கு இந்தச் சேவை வழங்கப்பட்டுள்ளது.
பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை வேகமாகக் குறைந்து வருகிறது. பிற தனியார் நிறுவனங்கள் குறைந்த கட்டணத்துக்கு சேவையை வழங்குவதால் போட்டி அதிகரித்துள்ளது. இத்தகைய சூழலில் கவர்ச்சிகரமான சலுகைகளை வழங்குவதுதான் புத்திசாலித்தனமான அணுகுமுறையாகும்.
மாறாக, வாடிக்கையாளர்களின் விருப்பமின்றி ஹங்கமா சேவையைத் திணித்து அதற்காக அவர்களிடமிருந்து கூடுதல் கட்டணம் வசூலிப்பது கண்டிக்கத்தக்கது.
எனவே, வாடிக்கையாளர் மீது ஹங்கமா சேவையைத் திணிக்கக் கூடாது. அந்த நிறுவனத்துடன் பி.எஸ்.என்.எல் செய்துள்ள ஒப்பந்தத்தையும் உடனே ரத்து செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com