போக்குவரத்து தொழிலாளர் வேலைநிறுத்தம் எதிரொலி: நாளை முதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்

அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் திட்டமிட்டப்படி நாளை திங்கள்கிழமை முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தொழிற்சங்கங்கள்
போக்குவரத்து தொழிலாளர் வேலைநிறுத்தம் எதிரொலி: நாளை முதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்

சென்னை: அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் திட்டமிட்டப்படி நாளை திங்கள்கிழமை முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இதையடுத்து தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ள போக்குவரத்துக் கழகத் தொழிற்சங்கங்களுடன் அரசு நடத்திய முத்தரப்புப் பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாததால் இழுபறி நீடித்து வந்த நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமையும் நடந்த பேச்சுவார்த்தையிலும் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாததால் திட்டமிட்டப்படி நாளை 15 ஆம் தேதி முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் நடக்கும் என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய ஒப்பந்தம் செய்யப்படும். அந்த வகையில், 12-வது ஊதிய ஒப்பந்தம் கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி முடிவடைந்தது. செப். 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரவேண்டிய 13-ஆவது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான முதல் கட்டப் பேச்சுவார்த்தை கடந்த மார்ச் 7-இல் நடைபெற்றது.

புதிய ஊதிய ஒப்பந்தம், ஓய்வூதியம், வருங்கால வைப்பு நிதி வழங்கல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிற்சங்கங்கள் 15-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்தன.

இதையடுத்து தொடர்ந்து நடந்த பல்வேறு கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இந்நிலையில், சென்னை பல்லவன் இல்லத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை பகல் 12 மணிக்கு மீண்டும் போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் எவ்வித உடன்பாடும் ஏற்படாமல் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனையடுத்து திட்டமிட்டப்படி நாளை திங்கள்கிழமை 15 ஆம் தேதி முதல் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் நடைபெறும் என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

இந்நிலையில், மீண்டும் இன்று மாலை மீண்டும் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் தொழிற்சங்கங்கள் நிர்வாகிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையிலும் எந்த உடன்பாடு எட்டப்படாததால் பேச்சுவார்த்தை தோல்வில்யில் முடிந்தது.

இதையடுத்து, திட்டமிட்டபடி நாளை(15.5.2017) முதல் தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகள் இயக்கப்படமாட்டாது என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இதனிடையே, பல்வேறு பகுதிகளில் தற்போது வேலைநிறுத்தம் துவங்கியுள்ள நிலையில், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

பொதுமக்களின் நலன் கருதி, தமிழக அரசு விடுத்த கோரிக்கையை ஏற்று, தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக நாளை முதல் சென்னை எழும்பூர் - நெல்லை - சென்னை எழும்பூருக்கு நாளை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும்.

கோவை - சென்னை சென்ட்ரல் - கோவைக்கும், என்னை எழும்பூர்-திருவாரூர்-சென்னை எழும்பூருக்கு நாளை சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படும் என்றும், சிறப்பு கட்டண ரயிலுக்காக முன்பதிவு தொடங்கிவிட்டதாகவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி, கோவையிலிருந்து சென்னைக்கு தினமும் காலை 8 மணிக்கும், சென்னையிலிருந்து கோவைக்கு இரவு 8.30 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். சென்னையிலிருந்து நெல்லைக்கு தினமும் காலை 7.40 மணிக்கும், நெல்லையிலிருந்து சென்னை எழும்பூருக்கு இரவு 10.10 மணிக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படும்.

மேலும், இரவு 11.45 மணிக்கு திருவாரூரில் இருந்து சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு ரயில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், முரப்பூர், திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, ஆம்பூர், காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூர், சென்னை சென்ட்ரல் ஆகிய வழித்தடத்தில் இயக்கப்படுகிறது. 

சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு மார்கம்:

* தாம்பரம் - செங்கல்பட்டு காலை 8.10

* செங்கல்பட்டு - சென்னை கடற்கரை காலை 9.25

* சென்னை கடற்கரை - செங்கல்பட்டு காலை 11.15

* செங்கல்பட்டு - சென்னை கடற்கரை பகல் 1.15

* சென்னை கடற்கரை - செங்கல்பட்டு பிற்பகல் 3.08

* செங்கல்பட்டு - சென்னை கடற்கரை மாலை 5.15

* சென்னை கடற்கரை - தாம்பரம் இரவு 7.30

* தாம்பரம் - சென்னை கடற்கரை இரவு 8.35

* சென்னை கடற்கரை - தாம்பரம் இரவு 9.55

இதில் வழக்கமானதை விட கூடுதலாக 16,200 பயணிகள் சிறப்பு ரயில் மூலம் பயன் பெறலாம்.


சென்னை கடற்கரை - வேளச்சேரி மார்கம்:

* சென்னை கடற்கரை - வேளச்சேரி காலை 11.10

* வேளச்சேரி - சென்னை கடற்கரை பகல் 12.05

* சென்னை கடற்கரை - வேளச்சேரி பகல் 1.15

* வேளச்சேரி - சென்னை கடற்கரை பிற்பகல் 2.05

* சென்னை கடற்கரை - வேளச்சேரி பிற்பகல் 2.55

* வேளச்சேரி - சென்னை கடற்கரை பிற்பகல் 3.50

* சென்னை கடற்கரை - வேளச்சேரி மாலை 4.40

* வேளச்சேரி - சென்னை கடற்கரை மாலை 5.30

* சென்னை கடற்கரை - வேளச்சேரி மாலை 6.30

* வேளச்சேரி - சென்னை கடற்கரை இரவு 7.40

இந்த மார்கத்தில் சிறப்பு ரயில் மூலம் கூடுதலாக 13,500 பயணிகள் பயணம் மேற்கொள்ளலாம்.

சென்னை கடற்கரை - மூர்மார்க்கெட் - ஆவடி - திருவள்ளூர் மார்கம்:

* சென்னை கடற்கரை - திருவள்ளூர் காலை 10.15

* திருவள்ளூர் - மூர்மார்க்கெட் வளாகம் காலை 11.45

* மூர்மார்க்கெட் வளாகம் - திருவள்ளூர் பகல் 1.30

* திருவள்ளூர் - மூர்மார்க்கெட் வளாகம் பிற்பகல் 3

* மூர்மார்க்கெட் வளாகம் - திருவள்ளூர் மாலை 4.40

* திருவள்ளூர் - மூர்மார்க்கெட் வளாகம் மாலை 6.15
 
* மூர்மார்க்கெட் வளாகம் - ஆவடி இரவு 7.55

* ஆவடி - சென்னை கடற்கரை இரவு 9.05

* சென்னை கடற்கரை - ஆவடி இரவு 8.45

இந்தக் கூடுதல் சிறப்பு ரயிலில் 12,150 பேர் பயணம் செய்யலாம்.


சென்னை கடற்கரை - மூர்மார்க்கெட் - ஆவடி - பொன்னேரி மார்கம்:

* ஆவடி - எண்ணூர் காலை 8.10

* எண்ணூர் - சென்னை கடற்கரை காலை 9.55

* மூர்மார்க்கெட் வளாகம் - பொன்னேரி காலை 9.45

* பொன்னேரி - மூர்மார்க்கெட் வளாகம் காலை 10.55

* எண்ணூர் - மூர்மார்க்கெட் வளாகம் பிற்பகல் 1.55

* மூர்மார்க்கெட் வளாகம் - எண்ணூர் பிற்பகல் 2.05

* எண்ணூர் - மூர்மார்க்கெட் வளாகம் பிற்பகல் 2.55

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com