தொடரும் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்: பொதுமக்கள் கடும் பாதிப்பு

போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக தமிழகம் முழுவதும் பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளானார்கள்.
தொடரும் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்: பொதுமக்கள் கடும் பாதிப்பு

போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக தமிழகம் முழுவதும் பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளானார்கள். சென்னையில் மின்சார ரயில்களிலும், வெளியூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் கூட்டம் அலைமோதியது. தனியார் பேருந்துகள், ஷேர் ஆட்டோக்கள், ஆட்டோக்களில் பெரும்பாலானோர் பயணம் செய்தனர்.

சென்னையில் மத்திய பணிமனை, வடபழனி, தியாகராயநகர், அண்ணாநகர், அடையார், சைதாப்பேட்டை, பூந்தமல்லி, குரோம்பேட்டை, தாம்பரம், ஆலந்தூர், திருவான்மியூர், அயனாவரம், வியாசர்பாடி, திருவொற்றியூர், எண்ணூர் உட்பட மொத்தம் 31 பணிமனைகள் உள்ளன. ஒவ்வொரு பணிமனையில் இருந்து வழக்கமாக 150 முதல் 250 பேருந்துகள் வரையில் இயக்கப்படும். ஆனால், நேற்று காலையில் இருந்து வெறும் 20 முதல் 30 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன. இன்று மிக குறைந்த அளவே இயக்கப்படுவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர்.

அண்ணா தொழிற்சங்க பேரவை உள்ளிட்ட சில தொழிற்சங்கங்களும், தினக்கூலி மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் 30 சதவீத பேருந்துகளை ஓட்டினர். பெரும்பாலான இடங்களில் முழு அளவில் பேருந்துகளை இயக்காததால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

மக்களுக்கு உதவும் வகையில் இன்று செவ்வாய்க்கிழமை (மே 16) முதல் 100 சதவீதம் பேருந்துகள் இயக்கப்படும். வெளியூர்களிலிருந்து சென்னைக்கு 1,000 பேருந்துகள் கொண்டு வந்து இயக்கப்படும். தெற்கு ரயில்வேயிடம் உதவி கோரியுள்ளோம். சென்னையில் கூடுதல் மின்சார ரயில்களை இயக்குவதாக அவர்களும் உறுதி அளித்துள்ளனர்.

தேவை ஏற்பட்டால் ஓட்டுநர், நடத்துநர் உரிமம் பெற்றிருப்பவர்களைப் புதிதாகப் பணியில் அமர்த்தி பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். உரிமம் வைத்திருந்தாலும், சிறந்த ஓட்டுநரைத் தேர்வு செய்தே பேருந்துகளை இயக்க அனுமதிப்போம். அதனால் பொதுமக்கள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்தார்.

ஆனால், வெளியூரில் இருந்து ரயில் மூலம் சென்னை வந்த பயணிகள் தங்களின் இல்லங்களுக்கு எப்படி வீட்டுக்கு செல்வது என்று தெரியவில்லை. பல மணிநேரமாக மாநகர பேருந்துக்கு காத்துக்கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

பாதிப்பு இல்லாமல் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தாலும், பெரும்பாலான பேருந்துகள் இயங்கப்படாம இருக்கின்றன. எனவே, இந்த பிரச்சினைக்கு தீர்வு காண அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com