நாடு முழுவதும் விரைவில் மழைக்கு வாய்ப்பு: இஸ்ரோ தகவல்

இந்தியா முழுவதும் மழை மேகங்கள் சூழ்ந்திருக்கும் புகைப்படத்தை இன்சாட் 3டி செயற்கைக்கோள் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில்
இன்சாட் 3டி வானிலை ஆராய்ச்சி செயற்கைக்கோள் வெளியிட்ட நாடு முழுவதும் மேகம் சூழ்ந்துள்ள புகைப்படம்.
இன்சாட் 3டி வானிலை ஆராய்ச்சி செயற்கைக்கோள் வெளியிட்ட நாடு முழுவதும் மேகம் சூழ்ந்துள்ள புகைப்படம்.

இந்தியா முழுவதும் மழை மேகங்கள் சூழ்ந்திருக்கும் புகைப்படத்தை இன்சாட் 3டி செயற்கைக்கோள் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் விரைவில் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
இன்சாட் 3டி செயற்கைக்கோள் அனுப்பியுள்ள இந்தப் புகைப்படத்தை இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
இன்சாட் 3டிஆர் செயற்கைக்கோள் 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து ஏவப்பட்டது.
தகவல்தொடர்பு, காலநிலையை முன்கூட்டியே அறிந்து கொள்வதற்காக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இன்சாட்3டிஆர் என்ற வானிலை செயற்கைகோளை வடிவமைத்தது. இந்த செயற்கைகோள் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டது. கடுங்குளிர், வெப்பம் உள்ளிட்ட எந்த சூழ்நிலையிலும் செயல்படும் வகையில் இது வடிவமைக்கப்பட்டது.
இன்சாட்3டிஆர் செயற்கைக்கோள், கடல் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், வானிலை மாற்றங்களை முன்கூட்டியே அறிவிப்பது, கடலில் இயற்கைப் பேரிடர் மற்றும் சீற்றங்களை அறிவிப்பது, ராணுவத்துக்குத் தேவையான தகவல்களை அளிப்பது, சாலை போக்குவரத்தை கண்காணித்தல், நிலம் தொடர்பான தகவல்கள், புவியியல் ஆய்வு, ராணுவ ஆராய்ச்சி உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த செயற்கை கோளில் 1.700 வாட் திறன் கொண்ட 2 பேட்டரிகள், 2 நவீன ரக கேமராக்கள், மீட்பு மற்றும் தேடும் பணிக்கான டிரான்ஸ்பாண்டர்கள், நவீன கருவிகள் பொருத்தப்பட்டிருந்தன. இதன் ஆயுட்காலம் 10 ஆண்டுகள்.
வர்தா புயலையும் முன் கூட்டியே எச்சரித்தது: தமிழகத்தை கடந்தாண்டு இறுதியில் தாக்கிய வர்தா புயல் குறித்து முன் கூட்டியே எச்சரித்து புகைப்படத்தை அனுப்பியது இன்சாட் 3டி.ஆர். செயற்கைக்கேள்.
இந்தச் செயற்கைக்கோள்களில் இருந்து கிடைக்கப்பெற்ற தகவல்கள் புயலின் நகர்வை கணிப்பதற்கு உதவி செய்தது. இதனால் பொதுமக்களுக்கு அதிகாரிகள் முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்க முடிந்தது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இன்சாட்-3டிஆர் மற்றும் ஸ்காட்சாட்-1 செயற்கைக்கோள்களில் இருந்து கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் இருந்து 10 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் மீட்கப்பட்டனர்.
மேகம் கருக்குது: இன்சாட் 3டி செயற்கைக்கோள் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட புகைப்படம் குறித்து இஸ்ரோ விஞ்ஞானி ஒருவர் கூறியது: இமயமலைத் தொடர்களில் ஏற்பட்டுள்ள வானிலை மாற்றம் வட மாநிலங்களில் விரைவில் மழையை வரவழைக்கும் சூழல் நிலவுகிறது. தென் இந்தியாவைப் பொருத்தவரை வங்காள விரிகுடா, இந்தியப் பெருங்கடல், அரபிக் கடல் பகுதிகளில் மழை மேகங்கள் சூழ்ந்து வருகின்றன.
இதன்படி பார்த்தால் மே இறுதியில் அல்லது ஜூன் முதல் வாரத்தில் தமிழகம், கேரளப் பகுதிகளில் நல்ல மழையை எதிர்பார்க்கலாம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com