பேருந்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்: பேச்சுவார்த்தையில் உடன்பாடு

தமிழகத்தில் கடந்த 2 நாள்களாக நடைபெற்ற அரசுப்பேருந்து ஊழியர்களின் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற தொழிற்சங்க நிர்வாகிகள் செவ்வாய்க்கிழமை (மே 16) இரவு ஒப்புக் கொண்டனர்.
தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பங்கேற்ற அமைச்சர்கள் மற்றும் தொழிற்சங்கத்தினர்.
தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பங்கேற்ற அமைச்சர்கள் மற்றும் தொழிற்சங்கத்தினர்.

தமிழகத்தில் கடந்த 2 நாள்களாக நடைபெற்ற அரசுப்பேருந்து ஊழியர்களின் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற தொழிற்சங்க நிர்வாகிகள் செவ்வாய்க்கிழமை (மே 16) இரவு ஒப்புக் கொண்டனர்.
சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி மற்றும் 10 தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டத்தில் உடன்பாடு ஏற்பட்டது.
முதல் கட்டமாக ரூ.1,250 கோடி: போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஓய்வூதியர்கள், பணியில் உள்ள ஊழியர்களுக்கான மொத்த நிலுவைத் தொகையில் முதல் கட்டமாக ரூ.1,250 கோடியை வழங்க பேச்சுவார்த்தையில் அரசு ஒப்புக் கொண்டது. மீதமுள்ள ரூ. 450 கோடி நிலுவைத் தொகை வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் வழங்கப்படும் என்று அரசுத் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை இரவு முதல்...13-ஆவது ஊதிய ஒப்பந்தம், ஓய்வூதியர்களுக்கான நிலுவைத் தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மே 15-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தம் மேற்கொள்ளப் போவதாக தொழிற்சங்க நிர்வாகிகள் வேலைநிறுத்த அறிவிப்பை வெளியிட்டனர்.
அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை பலன் அளிக்காததைத் தொடர்ந்து வேலைநிறுத்த முடிவை வெளியிட்டனர்.
தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை (மே 15) முதல் வேலைநிறுத்தம் என அறிவித்தபோதும்கூட ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் பேருந்துகளை ஆங்காங்கே நிறுத்தி விட்டு பேருந்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடத் தொடங்கினர். வார வேலைநாளின் முதல் நாளான திங்கள்கிழமை (மே 15) பேருந்து சேவை பெருமளவு பாதிக்கப்பட்டது.
சென்னை, மதுரை, திருச்சி உள்பட பெரும்பாலான இடங்களில் பேருந்து சேவைகள் முடங்கின. தொடர்ந்து செவ்வாய்க்கிழமையும் (மே 16) பேருந்து சேவை பல இடங்களில் பெரும் பாதிப்புக்குள்ளானது.
மீண்டும் பேச்சு: இந்நிலையில் தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி மற்றும் தொ.மு.ச. மாநில பொதுச் செயலர் எம்.சண்முகம், சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராஜன் உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் செவ்வாய்க்கிழமை பங்கேற்ற கூட்டத்தில் உடன்பாடு ஏற்பட்டு பேருந்து ஊழியர்களின் இரண்டு நாள் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளது.
அமைச்சர் நன்றி: பேருந்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற முடிவு செய்ததற்காக தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நன்றி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com