10-ம் வகுப்பு பொதுத் தேர்வு: புதுச்சேரி மாநிலத்தில் 93.67 சதவீதம் தேர்ச்சி

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் புதுச்சேரி மாநிலம் மொத்தம் 93.67 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் புதுச்சேரி மாநிலம் மொத்தம் 93.67 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இது கடந்த ஆண்டைவிட இந்தாண்டு 1.25 தேர்ச்சி சதவீதம் அதிகம். தேர்வு எழுதிய 17,495 மாணவ, மாணவியரில் 16388 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் 8-ம் தேதி தொடங்கி 28 ஆம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு  நடைபெற்றது. இதில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியை சேர்ந்த 17, 495 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். இந்நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை புதுச்சேரி அரசு பள்ளிக் கல்வித்துறை வெள்ளிக்கிழமை வெளியிட்டது. 

அதில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் தேர்வு எழுதிய 17,495 மாணவ மாணவிகளில் 16,388 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம்  93.67 சதவீதமாகும். இது கடந்த ஆண்டை விட 1.25 சதவீதம் அதிகம் ஆகும்.

மாணவியர் 8278 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 95.90 சதவீதம். மாணவர்கள் 8110 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் 91.5 சதவீதம் ஆகும். மாணவர்களை காட்டிலும் மாணவியர் 4.40 சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.

பள்ளிகள் தேர்ச்சி விகிதம்
அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 87.11. தனியார் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 97.78 சதவீதம் ஆகும். மாணவியர் மாணவர்களைவிட 4.40 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அரசுப் பள்ளிகளில் தேர்வு எழுதிய 6734 பேரில் 5866 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம்: மாணவர்-81.63, மாணவியர்-91.97. மொத்தம்-87.11.
தனியார் பள்ளிகளில் தேர்வு எழுதிய 10761 பேரில் 10522 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம்: மாணவர்-96.98, மாணவியர்-98.68. மொத்தம்-97.78 சதவீதம் ஆகும்.

பிராந்திய வாரியாக தேர்ச்சி
புதுச்சேரி பிராந்தியத்தில் தேர்வு எழுதிய 14670 பேரில் 13841 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம்-94.35.
காரைக்கால் பிராந்தியத்தில் 2825 பேரில் 2547 பேர் தேர்ச்சி பெற்றனர்.

தேர்ச்சி விகிதம் 90.16.
புதுச்சேரி பிராந்தியத்தில் அரசுப் பள்ளிகள் 88.07 சதம் தேர்ச்சி பெற்ற (கடந்த ஆண்டைக் காட்டிலும் 1.13 சதவீதம் அதிகம்), காரைக்கால் பிராந்தியத்தில் தேர்ச்சி விகிதம் 83.32 சதமாகும். (கடந்த ஆண்டைக்காட்டிலும் 6.11 சதம் அதிகம்).

143 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி
புதுச்சேரி, காரைக்காலில் மொத்தம் உள்ள பள்ளிகள் எண்ணிக்கை 301 ஆகும். 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகள்: புதுவையில் 117, காரைக்கால்-26. மொத்தம் 143 பள்ளிகள் ஆகும்.

அரசுப் பள்ளிகள் 100 சதம்
புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியங்களில் மொத்தம் உள்ள 111 அரசுப் பள்ளிகளில் 19 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றன. அதில் புதுவையில் 14 அரசுப் பள்ளிகளும்,, காரைக்காலில் 5 அரசுப் பள்ளிகளும் அடங்கும்.

100/100 மதிப்பெண்கள் பெற்றவர்கள் பாடம்-எண்ணிக்கை
பிரெஞ்சு-19, கணிதம்-425, அறிவியல்-242, சமூக அறிவியல்-1673, மொத்தம் 2359 பேர் 100/100 மதிப்பெண்கள் பெற்றனர்.

மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள், எண்ணிக்கை:
491-500: 187 பேர், 481-490: 836 பேர், 476-480: 452 பேர், 451-475: 2223 பேர், 401-450: 3850 பேர்.
முந்தைய ஆண்டுகளில் தேர்ச்சி
வருடம்,    எழுதியோர்,   தேர்ச்சி பெற்றவர்கள்,   தேர்ச்சி விழுக்காடு: 
2013-14,     18419,             16887,                          91.68.
2014-15,     19559,            18054,                           92.31.
2015-16,     17752,            16407                            92.42.
2016-17,     17495,           16388,                            93.67.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com