ஆவின் பால் விநியோகம்: இலவச தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

ஆவின் பால் விநியோகம் தொடர்பான புகார்களை நுகர்வோர் 24 மணி நேர கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
ரூ.87 லட்சம் மதிப்பில் மூன்று குளிரூட்டப்பட்ட வாகனங்களை வெள்ளிக்கிழமை கொடியசைத்து தொடக்கி வைக்கிறார் பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி.

இதுகுறித்து தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
ஆவின் நிறுவன நுகர்வோரின் தேவைக்கேற்ப, சென்னை மாநகரில் தற்போது சராசரியாக ரூ.18 கோடி மதிப்புள்ள பால் உபபொருள்கள் மாதந்தோறும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆவின் அறிமுகப்படுத்தியுள்ள 500 கிராம் தயிர் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. நாளொன்றுக்கு 5,000 பாக்கெட் விற்பனையை எட்டியுள்ளது.
புதிய வாகனங்கள்: இதனிடையே, அம்பத்தூர் பால் உபபொருள்கள் பண்ணையில் இருந்து ஐஸ்கிரீம் வகைகளை மற்ற மாவட்ட ஒன்றியங்களுக்கு விநியோகம் செய்ய மூன்று குளிரூட்டப்பட்ட வாகனங்களை துறையின் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வெள்ளிக்கிழமை கொடியசைத்து தொடக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஆவின் நிர்வாக இயக்குநர் சி.காமராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நுகர்வோர் தங்கள் புகார் மற்றும் ஆலோசனைகளைத் தெரிவிக்க, 24 மணி நேர நுகர்வோர் நலன், சேவைப் பிரிவு இலவச தொலைபேசி எண் 1800-425-3300 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். மேலும், aavincomplaints@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டும் கூறலாம் எனவும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com