எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்குள் இரு அணிகளும் இணையும்: முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன்

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு முன்னதாக அதிமுகவின் இரு அணிகளும் இணையும் என முன்னாள் அமைச்சர் மாஃபா கே. பாண்டியராஜன் தெரிவித்தார்.
தண்ணீர் பந்தலை திறந்து வைத்து முதியவர்களுக்கு தர்பூசணி பழங்களை வழங்கிய முன்னாள் அமைச்சர் மாஃபா கே.பாண்டியராஜன்.
தண்ணீர் பந்தலை திறந்து வைத்து முதியவர்களுக்கு தர்பூசணி பழங்களை வழங்கிய முன்னாள் அமைச்சர் மாஃபா கே.பாண்டியராஜன்.

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு முன்னதாக அதிமுகவின் இரு அணிகளும் இணையும் என முன்னாள் அமைச்சர் மாஃபா கே. பாண்டியராஜன் தெரிவித்தார்.
ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக (புரட்சித் தலைவி அம்மா) அணி சார்பில் திருவள்ளூர் நகரம், கடம்பத்தூர் ஒன்றியப் பகுதிகளில் 15 இடங்களில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், தண்ணீர்பந்தலை திறந்துவைத்து கே.பாண்டியராஜன் பேசியதாவது:
அதிமுகவின் இரு அணிகள் ஒன்று சேரும் விவகாரத்தில் 2 நிபந்தனைகளில் நாங்கள் உறுதியாக உள்ளோம். ஒன்று, சசிகலா குடும்பத்தினரை அடியோடு ஒதுக்க வேண்டும்.
இரண்டாவதாக, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்ய வேண்டும். இந்த இரு நிபந்தனைகளையும் எக்காரணத்தைக் கொண்டும் கைவிடமாட்டோம்.
பேச்சுவார்த்தையின்போது, அனைத்தும் சாதகமாக வருவதுபோல், அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்த சசிகலா, டிடிவி.தினகரன் பேனர்கள் அகற்றப்பட்டன.
ஆனால், சில அமைச்சர்கள் தன்னிச்சையாக பேசி கலகத்தை ஏற்படுத்தி, இரு அணிகளை சேர விடாமல் செய்கின்றனர். இதனை முறியடித்து எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்குள் இரு அணியினரும் இணைவோம் என்றார்.
இந்நிகழ்ச்சியில் அவைத் தலைவர் தி.பா.கண்ணன், எம்ஜிஆர். மன்ற இளைஞரணி இணைச் செயலாளர் செவ்வை மு.சம்பத்குமார், முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் ரவிச்சந்திரன், முன்னாள் நகர்மன்றத் தலைவர் கமாண்டோ பாஸ்கர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com