பாஜகவுடன் கூட்டணி எப்போது?: டுவிட்டரில் பன்னீர்செல்வம் முன்னுக்கு பின்பு விளக்கம்

பாஜகவுடன் கூட்டணி எப்போது என்பது குறித்து முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பக்க பதிவில் தெரிவித்துள்ளார்.
பாஜகவுடன் கூட்டணி எப்போது?: டுவிட்டரில் பன்னீர்செல்வம் முன்னுக்கு பின்பு விளக்கம்

சென்னை: பாஜகவுடன் கூட்டணி எப்போது என்பது குறித்து முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பக்க பதிவில் தெரிவித்துள்ளார்.

தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக புரட்சித் தலைவி அம்மா கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் நேற்று வெள்ளிக்கிழமை சந்தித்தனர்.

இந்த சந்திப்பின்போது தமிழக அரசியல் குறித்து பிரதமரிடம் பேசவில்லை என்று பன்னீர்செல்வம் தெரிவித்தார். இருப்பினும், தமிழக அரசியல் நிலவரம், ஆளும் அதிமுகவில் உள்ள அமைச்சர்களின் செயல்பாடு உள்ளிட்டவை குறித்து பிரதமரிடம் பன்னீர்செல்வம் விளக்கியதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில், இன்று காலை ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பக்க பதிவில், உள்ளாட்சித்தேர்தல் அறிவிப்புக்குப் பின் பாஜக உடனான கூட்டணி பற்றி முடிவெடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.

அடுத்த சில மணித்துளிகளில், தனது டுவிட்டர் பக்க பதிவை மாற்றிய ஓ.பன்னீர்செல்வம், எந்த கட்சியுடனும் கூட்டணி அமைப்பது குறித்து உள்ளாட்சித்தேர்தல் தேதி அறிவிப்புக்குப் பின்னரே, கூட்டணி பற்றி முடிவெடுக்கப்படும் என்பதையே அவ்வாறு பதிவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ரஜினிகாந்த் அரசியல் வருவது குறித்து பன்னீர்செல்வத்திடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ரஜினியின் அரசியல் பிரவேசம் ஏற்கப்படுமா என்பதை தீர்மானிக்கக் கூடியவர்கள் மக்கள்தான் என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com