12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முறையில் மாற்றம்: பள்ளிக் கல்வித்துறை திட்டம்

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முறையில் விரைவில் மாற்றம் கொண்டு வர பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முறையில் மாற்றம்: பள்ளிக் கல்வித்துறை திட்டம்

சென்னை: 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முறையில் விரைவில் மாற்றம் கொண்டு வர பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

12-ம் வகுப்பு மொத்த மதிப்பெண் 1200-ல் இருந்து 600 ஆக குறைக்கவும், பாடவாரியாக மொத்த மதிப்பெண் 200-ல் இருந்து 100 ஆக குறைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தேர்வு நேரம் 3 மணியிலிருந்து 2.30 மணி நேரமாக குறைக்கபடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், 11 மற்றும் 12-ம் வகுப்பு பாட திட்டத்திலும் மாற்றம் கொண்டு வர விரைவில் அரசாணை வெளியிடப்படும். இந்த அறிவிப்பு பள்ளி திறப்பதற்கு முன்பு வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com