108 ஆம்புலன்ஸ் சேவைக்கு விரைவில் புதிய செயலி: சி.விஜயபாஸ்கர்

தமிழக அரசின் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு விரைவில் புதிய செயலி அறிமுகப்படுத்த உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறினார்.
108 ஆம்புலன்ஸ் சேவைக்கு விரைவில் புதிய செயலி: சி.விஜயபாஸ்கர்

தமிழக அரசின் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு விரைவில் புதிய செயலி அறிமுகப்படுத்த உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறினார்.
108 ஆம்புலன்ஸ் சேவையில் பணியாற்றும் ஓட்டுநர்கள் (பைலட்) தின விழா சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சிறப்பாகப் பணியாற்றிய 46 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் கெüரவிக்கப்பட்டனர். இதில் சுகாதாரத் துறை அமைச்சர் பேசியது:
தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. விபத்தில் சிக்கியவர்களை மீட்பதற்கோ, பாதிக்கப்பட்ட நோயாளிகளை மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்காகவோ அழைப்பு வந்தவுடன் பிற மாநிலங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் 17 அல்லது 18 நிமிடங்களில் போய்ச் சேருகிறது. ஆனால், தமிழகத்தில் தகவல் கிடைத்த 15-ஆவது நிமிடத்தில் ஆம்புலன்ஸ் அந்த இடத்தை அடைகிறது.
108 ஆம்புலன்ஸ் சேவைக்கான புதிய செயலி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஒரு விபத்தோ, உடல்நலக்குறைபாடோ ஏற்படும்போது, 108 கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவிப்பவர்கள் பொதுவாகப் பதற்றத்தில் இருப்பார்கள். அவர்களால் எந்த இடத்தில் விபத்து நடைபெற்றது என்பது குறித்த தகவல்களை தெளிவாக தெரிவிக்க இயலாது.
ஆனால், இந்த செயலியை ஆன்ட்ராய்ட்டு செல்லிடப்பேசிகளில் பதிவிறக்கம் செய்து, அதன் மூலம் 108 ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டைத் தொடர்பு கொண்டால், குறிப்பிட்ட செல்லிடப்பேசியை வைத்தே எந்த இடத்தில் இருந்து அழைப்பு வந்துள்ளது என்பதை மிகத்துல்லியமாக அறிய முடியும். இதன் மூலம் அதிவிரைவாக சம்பவ இடத்தை அடைய முடியும். இந்த செயலியை சில தினங்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடக்கி வைக்க உள்ளார் என்றார்.
இந்நிகழ்ச்சியில், சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், 108 ஆம்புலன்ஸ் சேவையை செயல்படுத்தி வரும் ஜிவிகே இஎம்ஆர்ஐ நிறுவன மண்டல மேலாளர் பிரபுதாஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com