பெய்ய மறுத்த மழை: சென்னைக்கு எப்போது நல்ல காலம் பிறக்கும்?

சென்னையில் மிச்சமிருக்கும் சொச்ச மண் தரையையாவது நனைத்து விட்டுப் போகும் அளவுக்கு தூறல் போட நேற்று இரவு இருந்த வாய்ப்பும், இன்று காலை கைநழுவிப் போய்விட்டது.
பெய்ய மறுத்த மழை: சென்னைக்கு எப்போது நல்ல காலம் பிறக்கும்?


சென்னை: சென்னையில் மிச்சமிருக்கும் சொச்ச மண் தரையையாவது நனைத்து விட்டுப் போகும் அளவுக்கு தூறல் போட நேற்று இரவு இருந்த வாய்ப்பும், இன்று காலை கைநழுவிப் போய்விட்டது.

இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் இன்று அதிகாலை 5 மணியளவில் தனது பேஸ்புக்கில் கூறியிருந்தது, மச்சிலிப்பட்டினம் அருகே வெப்பச்சலனம் காரணமாக உருவாகியிருந்த குறைந்த காற்றழுத்தம், சென்னை நோக்கி நகர வாய்ப்பு அதிகரித்திருக்கிறது. இதனால், சென்னையின் ஒரு சில இடங்களுக்கு மழைத் தூறலோ ஒரு சில இடங்களுக்கு லேசான மழையோ பெய்ய வாய்ப்பிருக்கிறது என்று பதிவு செய்திருந்தார்.

இறுதியாக, வருண பகவான் சென்னையைத் தீண்டக் கூடாது என்று எடுத்த விரதத்தை இன்று முடித்து விடுவார் என்று சென்னைவாசிகளும், வானத்தை அன்னாந்து பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஆனால் சென்னைவாசிகள் மேற்கொண்ட கடுந்தவம் போதவில்லை என்று. வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தம், பங்களாதேஷ் நோக்கி நகர்ந்துவிட்டது. எனவே, தமிழகத்துக்கு மழை வாய்ப்பு இல்லையென்றானது

சென்னையைப் பொறுத்தவரை, ஒரு சில இடங்களில் தூறல் போட கூட வாய்ப்பில்லை என்பது தெள்ளத் தெளிவு காலையில் வழக்கம் போல சூரியன் உதிக்க, ஆம்புலன்ஸ் வரும் போது வழிவிட மறுக்கும் வாகனங்களைப் போல அல்லாமல், மேகக் கூட்டங்கள் தானே கலைந்து சென்றுவிட்டன. இதனால் வானம் மேகமூட்டத்துடன் காணப்படாமல், சூரியன் மட்டுமே காட்டத்துடன் காணப்படுகிறது.

ஆனால் மளம் தளர வேண்டாம்... சென்னைக்கும் ஒரு நாள் நல்ல காலம் பிறக்கும், அப்போது மற்ற மாவட்டங்கள் வேடிக்கை பார்க்கும். அதுவரை காத்திருப்போம் என்றே முடிகிறது வானிலையின் ஆறுதல் செய்தி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com