நாளை சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவு

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை (மே 28) வெளியிடப்படும் என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிவித்துள்ளது.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை (மே 28) வெளியிடப்படும் என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிவித்துள்ளது.
தமிழகம் உள்பட நாடு முழுவதும் சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வை 6 லட்சத்து 38 ஆயிரத்து 865 மாணவர்கள், 4 லட்சத்து 60 ஆயிரத்து 26 மாணவிகள் என மொத்தம் 10 லட்சத்து 98 ஆயிரத்து 891 மாணவர்கள் எழுதினர்.
தேர்வு முடிவு தாமதம் ஏன்? சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த ஆண்டு மே 21-ஆம் தேதி வெளியிடப்பட்டன. கடந்த ஆண்டு 83.05 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.
தேர்வில் கடினமான கேள்வித்தாள்கள், தவறான கேள்விகள் கேட்கப்பட்டிருந்தால் சலுகை மதிப்பெண் வழங்குவது பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது. சலுகை மதிப்பெண் வழங்கும் முறை இந்த ஆண்டு (2017) ரத்து செய்யப்படும் என சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவித்தது. சிபிஎஸ்இ நிர்வாகத்தின் இந்த அறிவிப்பை எதிர்த்து தில்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடரப்பட்டது. இந்த ஆண்டு (2017) சலுகை மதிப்பெண் முறையைத் தொடருமாறும் அடுத்த ஆண்டு (2018) சலுகை மதிப்பெண் ரத்தை அமல்படுத்துமாறும் தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து வழக்கம்போல் சலுகை மதிப்பெண் வழங்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை (மே 28) தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com