இரண்டாவது நாளாக தொடரும் போராட்டம்: குடிநீர் கேன் விலை ரூ.100- ஐ எட்டும் அபாயம்! 

குடிநீர் கேன் மீது விதிக்கப்பட்ட 18 சதவீத ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை  வலியுறுத்தி நடைபெற்று வரும் குடிநீர் கேன் உரிமையாளர்களின் போராட்டம் ...
இரண்டாவது நாளாக தொடரும் போராட்டம்: குடிநீர் கேன் விலை ரூ.100- ஐ எட்டும் அபாயம்! 

சென்னை: குடிநீர் கேன் மீது விதிக்கப்பட்ட 18 சதவீத ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை  வலியுறுத்தி நடைபெற்று வரும் குடிநீர் கேன் உரிமையாளர்களின் போராட்டம் இரண்டாவது நாளை எட்டியுள்ள நிலையில், ஒரு குடிநீர் கேனின் கேனின் விலை ரூ.100-ஐ எட்டும் அபாயம் காணப்படுகிறது.

குடிநீர் கேன் மீது விதிக்கப்பட்ட 18 சதவீத ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த குடிநீர் கேன் உரிமையாளர்கள் ஞாயிற்றுக்கிழமை மாலையில் இருந்து வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களில் செயல்படும் 370 தனியார் குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனங்கள் மூலம் தினமும் 1.80 கோடி லிட்டர் குடிநீரானது, சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளுக்கு  கேன்கள் மூலம் விநியோகிக்கப்படுகிறது.தமிழகத்தில் தற்பொழுது பரவலாக வறட்சி நிலவும் நிலையில், குடிநீர் கேன்கள் மூலம்நடைபெறும் விநியோகமே 90% குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது.சராசரியாக ஒருநாளைக்கு எழு முதல் பத்து லட்சம் கேன்கள் சென்னை முழுவதும் விநியோகம் செய்யப்படுகிறது.

வரும் ஜுலை முதல் நாடுமுழுவதும் அமல்படுத்தப்பட உள்ள ஜிஎஸ்டி வரிவிதிப்பில் குடிநீர் கேனுக்கு 18 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குடிநீர் ஆலைகளுக்கு ஆழ்துளைக் கிணறுகள் மூலம் நீர் எடுப்பதை அதிகாரிகள் தடுத்து வருகின்றனர்.ஏற்கெனவே நிலத்தடிநீர் குறைந்து வருகிறது என்ற காரணத்தைக் கூறி மாதவரம் அருகே உள்ள கேன் குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களை மூட வைத்தனர். தற்போது மேலும் பல நிறுவனங்களை மூடுமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.இதனால் குடிநீர் கேன் வர்த்தகம் பெரிதும் பாதிப்படையும்.  எனவே எங்களது இந்த இரு முக்கியக் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை மூன்று மாவட்டங்களிலும் வேலைநிறுத்தத்தைத் தொடங்கியுள்ளோம் என போராட்டத்திற்கான காரணங்களாக  கிரேட்டர் தமிழ்நாடு தூய குடிநீர் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் தனியார் கேன் குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளன. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசித்துவரும் பெரும்பாலான மக்கள், தங்கள் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய கேன்களையே சார்ந்திருக்கும் நிலையில் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தால் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சாதாரணமாக ரூ.30 முதல் 35 வரை விற்கப்படும் குடிநீர் கேன்கள் , தற்பொழுது ரூ.50 வரை விற்கப்படுகின்றன. இந்த போராட்டம் தொடர்ந்தால் கேன்களின் விலை ரூ.100 முதல் 150 வரை விற்கப்படும் அபாயம் உள்ளது என்று பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com