மின்னணு குடும்ப அட்டையில் பிழைகளை நீக்க குழு அமைப்பு: அமைச்சர் ஆர். காமராஜ்

குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மின்னணு குடும்ப அட்டைகளில் (ஸ்மார்ட் கார்டு) உள்ள பிழைகளை நீக்க வட்டார அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என
மின்னணு குடும்ப அட்டையில் பிழைகளை நீக்க குழு அமைப்பு: அமைச்சர் ஆர். காமராஜ்

குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மின்னணு குடும்ப அட்டைகளில் (ஸ்மார்ட் கார்டு) உள்ள பிழைகளை நீக்க வட்டார அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல்துறை அமைச்சர் ஆர். காமராஜ் தெரிவித்தார்.
மதுரையில் 9 மாவட்டங்களுக்கான மண்டல அளவிலான பொதுவிநியோகத் திட்ட முழு கணினிமயமாக்கல் மற்றும் மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கலில் முன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு தலைமைவகித்து அமைச்சர் ஆர். காமராஜ் பேசியதாவது:
மின்னணு குடும்ப அட்டைகள் வழங்குவதில் தவிர்க்கமுடியாத தாமதம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மின்னணு குடும்ப அட்டைகளுக்கு ஆதார் இணைப்பு மற்றும் செல்லிடப்பேசி மூலம் 1.91 கோடி பேர் பதிவு செய்துள்ளனர். மாநில அளவில் 1.87 லட்சம் பேர் குடும்ப அட்டைகளை பதிவு செய்யவில்லை.
பதிவு செய்தவர்களில், இதுவரை 86.18 லட்சம் பேருக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மின்னணு குடும்ப அட்டைகளில் பெயர்ப் பதிவு உள்ளிட்டவற்றில் பிழை இருப்பதாக புகார் எழுந்துள்ளது.
ஆதார் அட்டையில் உள்ள ஆங்கில விவரங்களை மின்னணு அட்டையில் தமிழில் மொழி பெயர்த்து பதியும்போது பிழைகள் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பிழைகளை நீக்கிட வட்டார அளவில் அதிகாரிகள் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மின்னணு குடும்ப அட்டைகளை விரைவில் மக்களுக்கு வழங்கும் வகையில் எ2எ, ஙஐந ஆகிய அதிகாரிகளுக்கான வலைதளமும், ற்ய்ல்க்ள் என்ற பொதுமக்களுக்கான வலைதளமும் உருவாக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசிடமிருந்து பொது விநியோகத் திட்டத்துக்கு வழக்கத்தைவிட கூடுதலாக 26 மெட்ரிக் டன் அரிசி பெறப்பட்டுள்ளது. மேலும், 80 சதவிகிதம் புழுங்கல் அரிசியும், 20 சதவிகிதம் பச்சரிசியும் பொதுவிநியோகத் திட்டத்தில் வழங்கப்படுகிறது என்றார்.
கூட்டத்துக்கு அமைச்சர்கள் செல்லூர் கே. ராஜூ (கூட்டுறவு), ஆர்.பி. உதயகுமார் (வருவாய்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மைச் செயலர் பிரதீப்யாதவ், நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் கே.கோபால், கூட்டுறவு சங்கப் பதிவாளர் ஏ. ஞானசேகரன் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏ.கே.போஸ், நீதிபதி, பெரியபுல்லான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த உணவு வழங்கல் உள்ளிட்ட துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com