ஐ.பி.எஸ். அதிகாரியிடம் மீண்டும் விசாரணை: போலீஸார் திட்டம்

சென்னையில் "புளூடூத்" மூலம் ஐ.ஏ.எஸ். தேர்வில் முறைகேடு செய்ததால் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரி சபீர் கரீமை காவலில்

சென்னையில் "புளூடூத்" மூலம் ஐ.ஏ.எஸ். தேர்வில் முறைகேடு செய்ததால் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரி சபீர் கரீமை காவலில் எடுத்து மீண்டும் விசாரிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
சென்னை, எழும்பூரில் உள்ள மாநிலப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மையத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஐ.ஏ.எஸ். உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான தேர்வின்போது செல்லிடப்பேசி "புளூடூத்" மூலம் மறுமுனையில் உள்ள நபரின் உதவியுடன் விடைகளை எழுதி முறைகேட்டில் ஈடுபட்டதாக, தமிழக காவல்துறையில் உதவி காவல் கண்காணிப்பாளராகப் பணிபுரியும் கேரள மாநிலம், ஆலுவா பகுதியைச் சேர்ந்த சபீர் கரீம் கைது செய்யப்பட்டார். 
தொழில்நுட்ப உதவி மூலம் விடைகளைக் கூறிய சபீர் கரீமின் மனைவி ஜாய்சி ஜாய், அவருக்கு உறுதுணையாக இருந்த நண்பர் ஹைதராபாத்தைச் சேர்ந்த ராம்பாபு ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டு கைதான சபீர் கரீமை புதன்கிழமை இரவு இடைநீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அத்துடன் விசாரணை அறிக்கையும் மத்திய உள்துறை, குடிமைப்பணிகள் தேர்வாணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 
இந்நிலையில், சிறையில் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டிருக்கும் சபீர் கரீமை போலீஸார் தங்களில் காவலில் எடுத்து மீண்டும் விசாரணை நடத்துவதற்கான நடவடிக்கைகளை சென்னை போலீஸார் மேற்கொண்டுள்ளனர். 
இதையொட்டி நீதிமன்றத்தில் ஓரிரு நாள்களில் போலீஸார் மனு தாக்கல் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com