பொறியியல் கண்காட்சி: பார்வையாளர்களைக் கவர்ந்த 'ரோபோ' 

சென்னையில் நடைபெற்றுவரும் தானியங்கி பொறியியல் கண்காட்சியில், இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தில் உருவாக்கப்பட்ட ரோபோ (தொழில் சார் எந்திரன்) பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.
பொறியியல் கண்காட்சி: பார்வையாளர்களைக் கவர்ந்த 'ரோபோ' 

சென்னையில் நடைபெற்றுவரும் தானியங்கி பொறியியல் கண்காட்சியில், இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தில் உருவாக்கப்பட்ட ரோபோ (தொழில் சார் எந்திரன்) பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.
மெஸ்ஸி ஃபிராங்க்ஃபர்ட் இந்தியா நிறுவனம் சார்பில், 3 நாள்கள் தானியங்கி பொறியியல் கண்காட்சியை சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார். 
'ரோபோ' குறித்து டாடா மோட்டர்ஸின் துணை அமைப்பான 'டால் மேனுபேக்சரிங்' நிறுவனத்தின் ரோபோட்டிக்ஸ் பிரிவு பொது மேலாளர் சந்தீப் தாக்கர் கூறியது: 
இந்தியாவின் முதல் தொழில்சார் எந்திரன் இது. இந்தியாவில் தயாரிப்போம் என்ற கருத்தாக்கத்தை முன்னிறுத்தி, தானியங்கிக் கருவிகளில் மிக இலகுவாக பொறியியல், நுட்ப இயந்திரங்கள், மின்னியல் சாதனங்கள், மென்பொருள் தர சோதனை செய்தல், பிளாஸ்டிக், பொருள் போக்குவரத்து, கல்வி மற்றும் பொறியியல் தொழில் துறை ஆகிய எல்லாவற்றுக்கும் மிகச் சிக்கனமாக தீர்வுகளை அளிக்கக்கூடியதாக இது தயாரிக்கப்பட்டுள்ளது. 
ரூ.7 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை... வெல்டிங், இணைக்கும் இடங்கள், பொருத்துதல், ஆய்வு உள்பட பல்வேறு பிரிவுகளில் இதை பயன்படுத்தலாம். மந்தமான வேலை, அபாயகரமான பணிகளிலும் இதைப் பயன்படுத்தலாம். 10 கிலோ எடை கொண்ட எந்திரன் விலை ரூ.7 லட்சம். தென் கொரியாவில் 10,000 தொழிலாளர்களுக்கு 530 தொழில்சார் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இந்தியாவில் 10,000 பேருக்கு 2 இயந்திரங்கள் மட்டும் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் இதன் பயன்பாடு மிக குறைவு. 
இந்தியாவில் சிறு குறு நடுத்தரத் தொழிலில் ஊக்கப்படுத்த குறைந்த விலையில் மேம்படுத்தப்பட்டுள்ள இந்த 2 கிலோ எடை கொண்ட இயந்திரன் ரூ.5 லட்சம் என்றார்.
தமிழக தொழில் வழிகாட்டு அமைப்பு துணைத்தலைவர் மதி ஷில்பா பிரபாகர், நிகான் இந்தியா நிறுவனத்தின் அதிகாரி அகிரா முராமோட்டோ, மெஸ்ஸி ஃபிராங்க்ஃபர்ட் இந்தியா நிறுவன மேலாண்மை இயக்குநர் ராஜ் மனேக் உள்படபலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com