கத்தரிக்காய், தக்காளி உள்பட காய்கறி விதைகள் அளிக்கும் திட்டம்: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

கத்தரிக்காய், தக்காளி உள்பட காய்கறி விதைகள் வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைத்தார்.
கத்தரிக்காய், தக்காளி உள்பட காய்கறி விதைகள் அளிக்கும் திட்டம்: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

கத்தரிக்காய், தக்காளி உள்பட காய்கறி விதைகள் வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைத்தார்.
 இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்தி:- சென்னை போன்ற நகரங்களில் வீட்டு மாடிகளில் காய்கறித் தோட்டம் அமைப்பதற்கான திட்டம் ஏற்கெனவே செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், புறநகர் வீட்டு காய்கறி உற்பத்தி பெருக்கு திட்டத்தின் கீழ் காய்கறி விதைகள் வழங்கும் புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் படி, கத்தரி, தக்காளி, புடலங்காய், பாகற்காய், பீர்க்கங்காய், மிளகாய், கொத்தவரங்காய், கீரை வகைகள் ஆகிய காய்கறிகளில் ஏதேனும் 5 காய்கறி விதைகள் அடங்கிய 6 லட்சத்து 25 ஆயிரம் பாக்கெட்டுகள் வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தை தொடங்கி வைப்பதற்கு அடையாளமாக 5 பேருக்கு காய்கறி விதைகள் அடங்கிய பாக்கெட்டுகளை முதல்வர் வழங்கினார்.
 புதிய கட்டடங்கள் திறப்பு: தஞ்சாவூர் மாவட்டம் ரகுநாதபுரத்தில் உள்ள அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிக்காக கட்டப்பட்ட நிர்வாக மற்றும் கல்வியியல் கட்டடங்களை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். இதேபோன்று, ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு கட்டப்பட்ட புதிய கட்டடங்களையும் அவர் திறந்தார்.
 திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் கட்டப்பட்ட உணவு தானிய சேமிப்புக் கிடங்கினை முதல்வர் திறந்து வைத்தார். இந்தச் சேமிப்பு கிடங்கால் விவசாயிகள் வேளாண் விளை பொருள்களை மழை, வெயில், ஈரப்பதம் மற்றும் இதர இயற்கை இடர்பாடுகளில் இருந்து பாதுகாத்து விஞ்ஞான முறைப்படி சேமிப்பதற்கு வசதியாக கட்டப்பட்டுள்ளது.
 மேலும், நாகப்பட்டினம் செம்பனார்கோயில், பெரம்பலூர், திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம், துரிஞ்சாபுரம், விழுப்புரம் மாவட்டம் வானூர், மரக்காணம் ஆகிய இடங்களில் கட்டப்பட்ட 6 ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையக் கட்டடங்கள், ஈரோடு மாவட்டம் மயிலம்பாடியில் கட்டப்பட்டுள்ள சேமிப்புக் கிடங்கு, விழுப்புரம் மாவட்டம் மணலூர்பேட்டை, திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், திருவண்ணாமலை மாவட்டம் அம்மாபாளையத்தில் மஞ்சள் பதப்படுத்தும் மையம், வில்லரசம்பட்டியில் பரிவர்த்தனைக் கூடம், திருவண்ணாமலையில் மாவட்ட தோட்டக் கலை தொழில்நுட்ப ஆதார மையம் ஆகிய வேளாண்மைத் துறைக்கான புதிய கட்டடங்களை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.
 இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் துரைக்கண்ணு, பாண்டியராஜன், பெஞ்ஜமின், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com