போட்டித் தேர்வு பயிற்சி வகுப்பு: நவம்பர் 13-இல் முதல்வர் தொடங்கி வைக்கிறார்

பள்ளி மாணவர்களுக்கு நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமை (நவ.13) தொடங்கி வைக்க உள்ளார்.

பள்ளி மாணவர்களுக்கு நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமை (நவ.13) தொடங்கி வைக்க உள்ளார்.
 பல ஆண்டுகளாக பாடத் திட்டம் மாற்றாதது, போட்டித் தேர்வு பயிற்சி இல்லாதது போன்ற காரணங்களால் ஜே.இ.இ., நீட் போன்ற அகில இந்திய அளவிலான போட்டித் தேர்வுகளில் தமிழக மாணவர்கள் தொடர்ந்து பின்தங்கி வருகின்றனர். குறிப்பாக, தமிழக அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் ஒரு சிலரே இந்தப் போட்டித் தேர்வுகளில் தகுதி பெறுகின்றனர்.
 இந்த நிலையை மாற்றும் வகையில், பள்ளி மாணவர்களுக்கான பாடத் திட்டத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கையை தமிழக அரசு இப்போது எடுத்து வருகிறது. மேலும், அகில இந்திய போட்டித் தேர்வுகளை தமிழக மாணவர்கள் தயக்கமின்றி எதிர்கொள்ளும் வகையில், இலவசப் பயிற்சியை அளிப்பதற்கான நடவடிக்கையையும் தமிழக அரசு எடுத்துள்ளது. இதற்காக மாவட்ட வாரியாக 600-க்கும் அதிகமான பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
 இந்தப் பயிற்சி வகுப்புகளை, சென்னை கலைவாணர் அரங்கில் திங்கள்கிழமை (நவ. 13) நடைபெறும் விழாவில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்க உள்ளார். மாணவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சி கையேட்டையும் விழாவில் முதல்வர் வெளியிட உள்ளார்.
 இந்த விழாவில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளி கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், அரசு தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com