ஆளுநர் ஆய்வை டேக் இட் ஈஸியாக எடுத்துக் கொள்ள வேண்டும்: தமிழக அமைச்சர் 'அடடே' கருத்து! 

கோவையில் ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் ஆய்வு நடத்தியதை டேக் இட் ஈசியாகதான் எடுத்துக் கொள்ள வேண்டும் என தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
ஆளுநர் ஆய்வை டேக் இட் ஈஸியாக எடுத்துக் கொள்ள வேண்டும்: தமிழக அமைச்சர் 'அடடே' கருத்து! 

கோவை: கோவையில் ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் ஆய்வு நடத்தியதை டேக் இட் ஈசியாகதான் எடுத்துக் கொள்ள வேண்டும் என தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோவையில் அமைந்துள்ள  பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்  நேற்று முன்தினம் கோவை சென்றார். அங்கு நடைபெற்ற பல்கலைக்கழக நிகழ்ச்சிக்குப் பிறகு, அவர்  கோவை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி தனி அதிகாரி, மாநகர காவல் ஆணையர் உள்பட முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்

இந்த நிகழ்வு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகள் இந்த ஆய்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன.அத்துடன் ஆளும்கட்சியிலேயே இதுகுறித்து மாறுபட்ட கருத்துக்கள் நிலவி வந்தன.

அத்துடன் நில்லாமல் நேற்று காலை கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் சென்ற ஆளுநர், அங்கு தூய்மை இந்தியா திட்டத்தின் படி நடைபெறும் பணிகளை ஆய்வு செய்தார். அவரே துடைப்பம் மூலம் அங்குள்ள குப்பைகளை அள்ளும் பணியிலும் ஈடுபட்டார்.

இந்நிலையில் இது குறித்து நிகழ்ச்சி ஒன்றுக்காக கோவை வந்த தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடம், செய்தியாளர்கள் விமான நிலையத்தில் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து அமைச்சர் கூறியதாவது:

கோவையில் ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் ஆய்வு நடத்தியதை டேக் இட் ஈசியாகதான் எடுத்து கொள்ள வேண்டும். இதேபோல் அனைத்து மாவட்டங்களிலும் ஆளுநர் ஆய்வு நடத்தினாலும் அது வரவேற்புக்குரியது.

மேலும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சியின்போது கூட இதேமாதிரி ஆளுநர் ஆய்வு நடத்தியிருந்தாலும் அது தவறில்லை.

இவ்வாறு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com