தமிழக பள்ளிகளுக்கான புதிய பாடத்திட்ட வரைவு: முதல்வர் பழனிசாமி வெளியிட்டார்! 

தமிழக பள்ளிகளுக்கான புதிய பாடத்திட்ட வரைவினை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி வெளியிட்டார்
தமிழக பள்ளிகளுக்கான புதிய பாடத்திட்ட வரைவு: முதல்வர் பழனிசாமி வெளியிட்டார்! 

சென்னை: தமிழக பள்ளிகளுக்கான புதிய பாடத்திட்ட வரைவினை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி வெளியிட்டார்

தமிழகத்தில் வரும் கல்வியாண்டு முதல் (2018-19) 1, 6, 9 மற்றும் 11 ஆகிய வகுப்புகளுக்குப் புதிய பாடத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்கான வரைவினை உருவாக்கும் புதிய பாடத் திட்டக்குழுவின் தலைவராக  அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரான மு. ஆனந்தகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். 

இந்த புதிய பாடத்திட்டக் குழுவில் பத்து உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர். சென்னையில் உறுப்பினர்களிடையேயான கலந்தாய்வுக் கூட்டம் இருமுறை நடந்துள்ளது. இதே போன்ற கருத்தறியும்  மண்டல கலந்தாய்வுக் கூட்டங்கள் கோவை, தஞ்சை, சென்னையில் நடத்தப்பட்டு, இந்த வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டு அரசிடம் அளிக்கப்பட்டுள்ளது.

பாடத்திட்டம் தயாரிப்பதுடன், அதை செயல்படுத்துவதற்கான உள்கட்டமைப்புகளையும், தொழில்நுட்பங்களையும் பள்ளிகளில் ஏற்படுத்துவது அவசியம். மொழி, அறிவியல், கணினி என அனைத்து பாடங்களிலும் அடிப்படை அறிவை மாணவர்கள் சரியாக பெறும் வகையிலும் பாடத்திட்ட வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நீட் உள்ளிட்ட பல்வேறு விதமான  போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்களை தயார் செய்யும் விதத்தில் பாடத்திட்ட வரைவு உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் பாடத்திட்டத்தை மாற்றும்போது ஆசிரியர்களுக்கும் சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்படும்.

பாடத் திட்டக்குழுவின் சார்பாக தயாரிக்கப்பட்ட அறிக்கையினை குழுவின் தலைவர் மு. ஆனந்தகிருஷ்ணன் முதல்வர் பழனிசாமியிடம் அளித்தார். அதனை முதல்வர் வெளியிட்டார் இந்த நிகழ்வில் பாடத் திட்டக்குழுவில் இடம்பெற்ற ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com