போயஸ் கார்டனில் சோதனை என்ற பெயரில் இனி யாரையும் புண்படுத்தக் கூடாது

போயஸ் கார்டனில் சோதனை என்ற பெயரில் இனி யாரையும் புண்படுத்தக் கூடாது எனமக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை கூறினார்.
போயஸ் கார்டனில் சோதனை என்ற பெயரில் இனி யாரையும் புண்படுத்தக் கூடாது

போயஸ் கார்டனில் சோதனை என்ற பெயரில் இனி யாரையும் புண்படுத்தக் கூடாது எனமக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை கூறினார்.
 கரூர் 21-ஆவது வார்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நிகழ்ச்சியில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்ற பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
 கரூர் அரசு மருத்துவக் கல்லூரியானது, சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை போன்று ரூ.350 கோடியில் கட்டப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துக்குள் பணிகள் முடிவடைந்து, 2019-இல் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
 ராமேசுவரம் மீனவர்கள் இந்திய கடலோரக் காவல் படையினரால் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து அனைத்து அமைச்சர்களையும் அழைத்து விவாதித்த பின்னர், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்க உள்ளோம். ஆளுநரின் நடவடிக்கை குறித்து கருத்துக் கூற முடியாது. போயஸ் கார்டனை அதிமுகவின் ஒவ்வொரு தொண்டனும் கோயிலாக நினைக்கிறார்கள். இனி அங்கு யார் மனதையும் புண்படுத்தும் வகையில் எந்த ஒரு நிகழ்வும் நடக்கக் கூடாது என்றார். பேட்டியின்போது, போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உடனிருந்தார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com