இது செவ்வாய்க்கிழமைக்கான மழை நிலவரம்: நேற்றைய விதிமுறைகளே இன்றும் தொடரும்

வாரத்தின் முதல் நாளான நேற்று அவ்வப்போது சூரிய வெளிச்சமும், பலத்த சத்தத்துடன் மழையும் பெய்து மக்களைக் குழப்பியது.
இது செவ்வாய்க்கிழமைக்கான மழை நிலவரம்: நேற்றைய விதிமுறைகளே இன்றும் தொடரும்


சென்னை: வாரத்தின் முதல் நாளான நேற்று அவ்வப்போது சூரிய வெளிச்சமும், பலத்த சத்தத்துடன் மழையும் பெய்து மக்களைக் குழப்பியது.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமைக்கான மழை நிலவரம் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது பேஸ்புக்கில் கூறியிருப்பதாவது, சென்னை நகரின் ஒரு சில பகுதிகளில் அவ்வப்போது பலத்த மழையை எதிர்பார்க்கலாம். கிட்டத்தட்ட நேற்று சொன்ன வானிலை நிலவரம் தான் இன்றும் நீடிக்கிறது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பே கூறியிருந்ததைப் போல, அனைவரும் மழைக் கோட் மற்றும் குடைகளை கையில் எடுத்து வந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

சென்னை நகரம் முழுவதுமே பரவலாக அவ்வப்போது மழை பெய்யும். இது கன மழையாக இருக்காது. ஆனால் 5 முதல் 15 நிமிடம் வரை பெய்யும். 

அதாவது, சூரியன் வெளிச்சத்தைக் காட்டிக் கொண்டிருக்கும் போதே திடீரென மேகங்கள் சூழ்ந்து மழை பெய்யும். சில நிமிடங்கள் நீடிக்கும். திடீரென மழை நின்றுவிடும். சூரியன் எப்போதும் போல மீண்டும் வந்து தனது பணியை செய்யும். இங்கொன்றும், அங்கொன்றுமாக மழை பெய்யும். பரவலாக மழை பெய்யும் என்று எதிர்பார்க்க வேண்டாம்.

மழையை அனுபவியுங்கள்.

தென் தமிழகம் - கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடியின் சில பகுதிகள் இன்று நல்ல மழையைப் பெறும்.  பாபநாசம் பகுதியை இன்று கவனிக்க வேண்டும். இன்று நல்ல மழை வாய்ப்பு இருக்கலாம்.

தமிழகத்தில் மழை தீவிரமடைவதைக் கண்காணிக்க நவம்பர் மாத இறுதி அல்லது டிசம்பர் மாத முதல் வாரத்துக்காக ஆர்வத்துடன் காத்திருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com