கார் ஓட்டுநர், உதவியாளர்கள் பினாமியாக இருந்த காலம் மலையேறிவிட்டது: வருமான வரித்துறை கவலை

கார் ஓட்டுநர்கள், வீட்டு வேலையாட்கள், உதவியாளர்கள் பினாமிகளாக இருந்த காலம் மலையேறிவிட்டது என்று வருமான வரித்துறை தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளது.
கார் ஓட்டுநர், உதவியாளர்கள் பினாமியாக இருந்த காலம் மலையேறிவிட்டது: வருமான வரித்துறை கவலை

சென்னை: கார் ஓட்டுநர்கள், வீட்டு வேலையாட்கள், உதவியாளர்கள் பினாமிகளாக இருந்த காலம் மலையேறிவிட்டது என்று வருமான வரித்துறை தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளது.

சசிகலாவின் உறவினர்கள், நண்பர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனை குறித்து இன்று விரிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அதில், சசிகலாவின் பினாமிகள் யார் என்பதை கண்டுபிடிப்பதில் பெரும் சிக்கல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, சசிகலாவின் பினாமியாக வெளியாட்கள் இருப்பதால் தற்போதைய சூழலில், அவர்களை கண்டறிவது சிக்கலான வேலையாக உள்ளது. கார் ஓட்டுநர், வீட்டு வேலையாட்கள், உதவியாளர்கள் பினாமிகளாக இருந்த காலம் மலையேறி விட்டது. எனவே, பினாமிகள் யார் என்பதை உறுதிபடுத்த விரிவான விசாரணை தேவைப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

அதோடு, கைப்பற்றப்பட்ட சொத்துக்களை அடிப்படையாக வைத்து பினாமி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியுமா என்ற  வகையிலும் ஆலோசனை நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், இந்த அதிரடி சோதனையில் 5 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் 7 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.1,430 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com