உடலுறுப்பு தானம் செய்தவர்களின் குடும்பத்தாரை கௌரவித்தார் முதல்வர் பழனிசாமி 

தமிழகத்தில் பல்வேறு வகைகளில் உடலுறுப்பு தானம் செய்தவர்களின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து கௌரவித்தார் முதல்வர் பழனிசாமி.
உடலுறுப்பு தானம் செய்தவர்களின் குடும்பத்தாரை கௌரவித்தார் முதல்வர் பழனிசாமி 


சென்னை: தமிழகத்தில் பல்வேறு வகைகளில் உடலுறுப்பு தானம் செய்தவர்களின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து கௌரவித்தார் முதல்வர் பழனிசாமி.

சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் உடல் உறுப்பு தான வார விழாவில், உடலுறுப்பு தானம் செய்தவர்களின் குடும்பத்தார் அழைக்கப்பட்டு, அவர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் பழனிசாமி, உடலுறுப்பு தானத்தில் பிற மாநிலங்களுக்கு தமிழகம்தான் முன்மாதிரி மாநிலமாகத் திகழ்கிறது. தேசிய அளவில் உடலுறுப்பு தானத்தில் தமிழகம் முதல் இடத்திலும் உள்ளது. 

மேலும், உடலுறுப்பு மாற்று சிகிச்சையில் தேசிய அளவில் தமிழகம் 2 முறை விருது பெற்றுள்ளது. 3வது முறையாக விருது பெற்று ஹாட்ரிக் சாதனை படைக்கும் என்று நம்புகிறோம்.

உடல் உறுப்பு தானம் வழங்குவோரின் குடும்பத்துக்கு தமிழக அரசு சார்பில் நிதி வழங்கப்படுகிறது. சிறுநீரகம், இதய மாற்று அறுவை சிகிச்சைகள் செய்ய 70 மருத்துவமனைகள் முன்பதிவு செய்துள்ளன. 

ஆண்டிற்கு உடல் உறுப்பு மாற்று சிகிச்சைக்காக சுமார் 10 லட்சம் பேர் பதிவு செய்து காத்திருக்கிறார்கள். அரசு மருத்துவமனைகளில் கட்டணமின்றி அதிகளவில் உடலுறுப்பு மாற்று சிகிச்சைகள் செய்யப்படுகின்றன என்று பேசினார்.

உடல் உறுப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்வோர் முன்பதிவு செய்ய அரசு சார்பில் இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டது.

விழாவில் பேசிய துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், தமிழகத்தில் உடல் உறுப்பு தானத்தை மேலும் அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com