செங்குன்றம் அருகே பாலத்தில் இருந்து கவிழ்ந்த கார்: காங்கிரஸ் பிரமுகரின் மருமகள் உள்ளிட்ட மூவர் பலி! 

செங்குன்றம் அருகே பணிகள் நிறைவு பெறாத பாலத்தில் இருந்து கார் ஒன்று விழுந்து நொறுங்கிய விபத்தில் காங்கிரஸ் பிரமுகரின் மருமகள் உள்ளிட்ட மூவர் பலியான பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது.
செங்குன்றம் அருகே பாலத்தில் இருந்து கவிழ்ந்த கார்: காங்கிரஸ் பிரமுகரின் மருமகள் உள்ளிட்ட மூவர் பலி! 

பொன்னேரி: செங்குன்றம் அருகே பணிகள் நிறைவு பெறாத பாலத்தில் இருந்து கார் ஒன்று விழுந்து நொறுங்கிய விபத்தில் காங்கிரஸ் பிரமுகரின் மருமகள் உள்ளிட்ட மூவர் பலியான பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது.

காஞ்சீபுரம் அருகே உள்ள மணிமங்கலத்தைச் சேர்ந்த பழனி - நவநீதம் தம்பதியரின் மகள் பவித்ரா. இவரது கணவர் ஐயப்பன் காங்கிரஸ் பிரமுகர் செல்வப்பெருந்தகையின் மகன். இவர் காங்கிரஸ் கட்சியில் காஞ்சீபுரம் மாவட்ட எஸ்.சி. எஸ்.டி. பிரிவு தலைவராக உள்ளார்.

இந்நிலையில் இவர்கள் நால்வரும் வியாழன் மாலை மீஞ்சூரில் உள்ள உறவினர் இல்ல திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு சென்றிருந்தனர்.  காரை டிரைவர் கந்தவேல் ஓட்டினார்.

நிகழ்ச்சி முடிந்து இரவு அனைவரும் காரில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டு இருந்தனர். இரவு 9 மணியளவில் மீஞ்சூர்-வண்டலூர் வெளிவட்ட சாலையில், செங்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே மேம்பாலத்தில் கார் வந்து கொண்டு இருந்தது.

இந்த பழத்தின் கட்டுமான பணி முழுவதும் முடிவடையாமல் உள்ளதைக் கவனிக்காமல் வந்த காரானது பாலத்தில் இருந்து தலைகுப்புற கீழே விழுந்தது. சுமார் 30 அடி உயரத்தில் இருந்து விழுந்ததால் கார் முழுவதும் நொறுங்கியது. விழுந்த இடத்தில் மேம்பால பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கிய குட்டைதண்ணீரில் கார் மூழ்கியது.

இந்த கொடூர விபத்தில் பழனி, அவரது மனைவி நவநீதம், அவர்களது மகள் பவித்ரா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.காரில் சிக்கி இருந்த அய்யப்பனும், டிரைவர் கநதவேலும் காரின் உடைந்த கண்ணாடி வழியாக சிரமப்பட்டு தப்பி வெளியே வந்தனர்.

பின்னால் மற்றொரு காரில் பழனியின் உறவினர்கள் பாலத்தினைக் கவனித்து காரை நிறுத்தியதால் அவர்கள்  அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

அவர்கள் உயிருக்கு போராடிய அய்யப்பன் மற்றும் கந்தவேலை மீட்டு சென்னை தனியார் மருத்துவமனை ஒன்றில்  சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து  சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com