ஆர்.கே.நகர் தொகுதி திமுக வேட்பாளர் என். மருதுகணேஷ் வாழ்க்கை குறிப்பு

சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக என்.மருதுகணேஷ் மீண்டும் போட்டியிடுவார் என கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் இன்று அறிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் தொகுதி திமுக வேட்பாளர் என். மருதுகணேஷ் வாழ்க்கை குறிப்பு

சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக என்.மருதுகணேஷ் மீண்டும் போட்டியிடுவார் என கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் இன்று அறிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவினையொட்டி கடந்த ஒராண்டாக காலியாக உள்ள ஆர்.கே.நகரின் வரும் டிச.21-ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை அறிவித்தது. இதனையடுத்து கடந்த தேர்தலில் அ.தி.மு.க. (அம்மா) அணி சார்பில் போட்டியிட்ட டி.டி.வி. தினகரன் மீண்டும் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் தி.மு.க.சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தேர்வு குறித்த ஆலோசனைக் கூட்டம் கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. இதில் ஆர்.கே.நகர் கிழக்குப் பகுதி பொறுப்பாளராக உள்ள என்.மருதுகணேஷ் வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டார்.

கடந்தமுறை அறிவிக்கப்பட்டு ரத்து செய்யப்பட்ட இடைத்தேர்தலிலும் மருதுகணேஷ் போட்டியிட்டார் என்பது குறிப்பிடதக்கது. வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட்ட மருதுகணேஷுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் க.அன்பழகன், மாவட்டச் செயலாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். 

வாழ்க்கை குறிப்பு: 
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராகப் போட்டியிடும் என்.மருதுகணேஷ் (43) தற்போது ஆர்.கே.நகர் கிழக்கு பகுதி திமுக பொறுப்பாளராக உள்ளார்.

பழைய வண்ணாரப்பேட்டை, ஆரணி ரங்கன் தெருவில் வசித்து வரும் இவரது தந்தை நாராயணசாமி. தாயார் பார்வதி 42-வது வார்டு மாமன்ற உறுப்பினராகவும், மகளிர் அணி மாவட்டத் துணை செயலாளராகவும் இருந்துள்ளார். 

பி.காம், எம்.ஏ.(இதழியல்), எல்.எல்.பி. படித்துள்ள மருதுகணேஷ் வழக்குரைஞராகவும், தினகரன் பத்திரிகையில் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பகுதி நேர செய்தியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கவிதா, பூமாலை என்ற மகளும், தனுஷ் மகனும் உள்ளனர்.

மருதுகணேஷ் முதலியார் சமூகத்தை சேர்ந்தவர் என்பதும், மனைவி கவிதா வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதும், இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com