ஊதிய உயர்வு வழங்கியதில் குளறுபடி: 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் போராட்டம்

ஊதிய உயர்வு வழங்கியதில் குளறுபடி நடைபெற்றுள்ளதாகக் கூறி 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊதிய உயர்வு வழங்கியதில் குளறுபடி நடைபெற்றுள்ளதாகக் கூறி 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை, 104 மருத்துவ சேவை உள்ளிட்டவற்றை ஜிவிகே இஎம்ஆர்ஐ என்ற நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. 108 ஆம்புலன்ஸ் சேவை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கியதில் குளறுபடி நடைபெற்றுள்ளது, தீபாவளி போனஸ் அளிக்க வேண்டும் என்றும் கூறி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாகப் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் கூறியது: தமிழக அரசு 25 சதவீத ஊதிய உயர்வு வழங்கியுள்ளது. ஆனால் நிறுவனம் 10 சதவீதமே அளித்துள்ளது. ஏப்ரல் மாதம் வழங்க வேண்டிய ஊதிய உயர்வை அக்டோபர் மாதத்தில்தான் அளித்துள்ளது.
ஒவ்வோர் ஆண்டும் தீபாவளி போனஸ் கோரி போராட்டம் அறிவித்தால் மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த ஆண்டும் 20 சதவீத போனஸ் அளிக்காவிட்டால் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கை அனுப்பியுள்ளோம் என்று தெரிவித்தனர்.
பேச்சுவார்த்தை: இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் பிரதிநிதிகளுடன் நிறுவனத்தின் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். 
ஊதிய உயர்வு குறித்து ஆந்திரத்தில் உள்ள நிறுவனத் தலைமையிடம் ஆலோசித்து கூறுவதாகத் தெரிவித்துள்ளனர். தீபாவளி போனஸ் குறித்து தொழிலாளர் நலத் துறை ஆணையருடனான பேச்சுவார்த்தை வெள்ளிக்கிழமை (அக்.6) காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com